அட்லீ : 'ஹாலிவுட்டில் இருந்து வந்த அழைப்பு' - ப்ளாக்பஸ்டர் இயக்குநரின் அடுத்த புராஜெக்ட்?

ஹாலிவுட்டில் கேப்டன் அமெரிக்கா, வெனாம் போன்ற படங்களில் வேலை செய்த ஸ்டண்ட் இயக்குநர் தனது படத்தை பார்த்ததாகவும் அங்கிருந்து தனக்கு கால் வந்த்ததாகவும் அட்லீ பதிலளித்துள்ளார்.
அட்லீ : ஹாலிவுட்டில் இருந்து வந்த அழைப்பு - ப்ளாக்பஸ்டர் இயக்குநரின் அடுத்த புராஜெக்ட்?
அட்லீ : ஹாலிவுட்டில் இருந்து வந்த அழைப்பு - ப்ளாக்பஸ்டர் இயக்குநரின் அடுத்த புராஜெக்ட்?Twitter
Published on

தமிழ் சினிமாவில் இப்போது பெரிய அளவில் பேசப்படும் இயக்குநராக திகழ்கிறார் அட்லீ. ஜாவான் திரைப்படம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ஹிட் ஆகியிருக்கிறது.

ஜாவான் படத்தின் வெற்றி நாம் எதிர்பார்த்ததுதான் என்றாலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக 1000 கோடி வசூலை தொட்டுவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்தவர் அட்லீ. இப்போது பாலிவுட்டில் சாதித்துவிட்டதால் அனைவரின் எதிர்பார்ப்புப்படி அவரிடம் ஹாலிவுட்டில் கால்பதிப்பது குறித்து சமீபத்திய நேர்காணலில் கேள்வி முன்வைக்கப்பட்டது.

ஹாலிவுட்டில் கேப்டன் அமெரிக்கா, வெனாம் போன்ற படங்களில் வேலை செய்த ஸ்டண்ட் இயக்குநர் தனது படத்தை பார்த்ததாகவும் அங்கிருந்து தனக்கு கால் வந்த்ததாகவும் அட்லீ பதிலளித்துள்ளார்.

"ஸ்டண்ட் இயக்குனர் ஸ்பைரோ அவருடைய நண்பர்களான முக்கிய இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் படம் பார்த்திருக்கிறார். படத்தில் நெடுஞ்சாலையில் ட்ரக்குகளை பைக்கை வைத்து ஷாருக் சேஸ் செய்வதைப் போல சண்டைக் காட்சி ஒன்று இருக்கும். ஷாருக்கின் பைக் டயரிலிருந்து நெருப்புப் பொறிகளெல்லாம் பறக்கும்.

Vijay- Atlee-Shah Rukh Khan
Vijay- Atlee-Shah Rukh KhanTwitter

அந்தக் காட்சியை பார்த்துவிட்டு ஸ்பைரோவின் நண்பர்கள் சிலர், இந்த ஸ்டண்ட் உங்களுடையதா இயக்குனருடையதா என கேட்க, ஸ்பைரோ என்னைப் பற்றி கூறி அந்த ஸ்டண்ட் ஐடியா இயக்குனரான என்னுடையதுதான் என கூறியிருக்கிறார். உடனே அங்கிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஹாலிவுட்டில் பணியாற்ற விருப்பம் இருந்தால் தொடர்புகொள்ளுங்கள் என அவர்கள் கூறினார்கள். இப்படி ஒரு ஸ்டண்டை முன்னர் பார்த்ததில்லை என வியந்தும் பேசினார்கள்." என அட்லீ கூறியிருக்கிறார்.

அட்லீ : ஹாலிவுட்டில் இருந்து வந்த அழைப்பு - ப்ளாக்பஸ்டர் இயக்குநரின் அடுத்த புராஜெக்ட்?
பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் : பெயர்கள் எப்படி வந்தது? சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?

அட்லீ இயக்குநர் சங்கரின் உதவியாளராக திரைப்பயணத்தைத் தொடங்கியவர். ஆரம்ப காலத்தில் குறும்படங்கள் இயக்கியிருக்கிறார்.

அவரின் முதல்படமான ராஜா ராணி வெற்றிபெற்றதுடன் அவருக்கு நற்பெயரையும் வாங்கிக்கொடுத்தது. தொடர்ந்து முன்னணி நடிகர் விஜயுடன் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார்.

அட்லீ : ஹாலிவுட்டில் இருந்து வந்த அழைப்பு - ப்ளாக்பஸ்டர் இயக்குநரின் அடுத்த புராஜெக்ட்?
ஷாருக் கான் முதல் சல்மான் கான் வரை : அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகர் யார்?

அட்லீயின் படங்கள் பிற படங்களின் சாயலில் இருப்பதாக விமர்சிக்கப்பட்டாலும் எல்லா படங்களும் பெருவெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்களை காதில் போட்டுக்கொள்ளாமல் முன்னேறி சென்றுகொண்டே இருக்கிறார் அட்லீ! அவரது அடுத்த புராஜெக்ட் ஹாலிவுட்டில் இருக்குமா என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.

அட்லீ : ஹாலிவுட்டில் இருந்து வந்த அழைப்பு - ப்ளாக்பஸ்டர் இயக்குநரின் அடுத்த புராஜெக்ட்?
Jawaan: விஜயகாந்த் படத்தை காப்பி அடித்தாரா அட்லீ? - புகார் அளித்த தயாரிப்பாளர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com