Avatar 2 : ஜேம்ஸ் கேமரனின் சம்பளம் என்ன? - டிஸ்னியின் சாதனைப் படம் எவ்வளவு லாபமடையும்?

கடந்த நவம்பர் மாதம் அளித்த பேட்டி ஒன்றில் "நாங்கள் லாபமடைய 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் தேவை" என்று கூறியிருந்தார் ஜேம்ஸ் கேமரன். அவதார் 2ம் பாகத்தின் இப்போதைய வசூல் 1.71 பில்லியன் டாலர்கள். தற்போதுவரை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சீராக ஓடிக்கொண்டு இருக்கிறது.
Avatar 2 : ஜேம்ஸ் கேமரானின் சம்பளம் என்ன? - டிஸ்னியின் சாதனைப் படம் எவ்வளவு லாபமடையும்?
Avatar 2 : ஜேம்ஸ் கேமரானின் சம்பளம் என்ன? - டிஸ்னியின் சாதனைப் படம் எவ்வளவு லாபமடையும்?Twitter
Published on

2022ம் ஆண்டு வெளியான படங்களில் மிகப் பெரிய வசூலை ஈட்டிய படமாக திகழ்கிறது அவதார் 2.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரன் இயக்கிய இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருந்ததில்லை.

கடந்த நவம்பர் மாதம் அளித்த பேட்டி ஒன்றில் "நாங்கள் லாபமடைய 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் தேவை" என்று கூறியிருந்தார் ஜேம்ஸ் கேமரன்.

அவதார் 2 - ஜேம்ஸ் கேமரன் சம்பளம் :

அவதார் 2ம் பாகத்தின் இப்போதைய வசூல் 1.71 பில்லியன் டாலர்கள். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சீராக ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்த மாதம் அன்ட் மேன் படம் ரிலீஸ் ஆகும் வரை அவதார் தொடர்ந்து வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2012ம் ஆண்டு வெளியான அவதார் முதல் பாகம் 2.92 பில்லியன் டாலர்கள் வசூலைக் குவித்தது. ஜேம்ஸ் கேமரனின் மற்றொரு வெற்றிப்படமான டைட்டானிக் 2.2 பில்லியன் டாலர்கள் வசூலித்தது. இந்த வெற்றிப்படங்களை எடுத்த இயக்குநருக்கு அவதார் 2-ல் ஒரு டாலர் கூட சம்பளம் கிடையாது.

2 பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூல் செய்தால் லாபத்தில் பங்குகள் கிடைக்கும்.

அவதார் 2 எப்படி லாபம் தரும்?

பில்லியன் கணக்கில் பணம் நடமாடும் ஹாலிவுட்டின் விந்தை இதுதான். அவதார் 2 திரைப்படம் 25 கோடி அமெரிக்க டாலர்களில் எடுக்கப்பட்டது. அதாவது 250 மில்லியன். இதன் விளம்பர செலவுகள் மற்றும் வட்டி எல்லாம் சேர்த்தால் 100 கோடி அமெரிக்க டாலர்களை எட்டும்.

இந்த தொகையை விட இருமடங்கு தொகையை திரையரங்குகள் வசூலித்தால் மட்டுமே திரையரங்ககுகளுக்கான கமிஷன் போக தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும்.

Avatar 2 : ஜேம்ஸ் கேமரானின் சம்பளம் என்ன? - டிஸ்னியின் சாதனைப் படம் எவ்வளவு லாபமடையும்?
Billie Eilish : Oscars வென்ற உலகின் முதல் 2k kid பில்லி எலிஷ்

அதாவது உலக அளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் பட்டியலில் இப்போது 7வது இடத்தில் இருக்கும் அவதார்-2, 4,5வது இடத்தை அடைய வேண்டும்.

தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிஸ்னி தானே ஓடிடி தளம் வைத்திருப்பதனால் ஓடிடி ரைட்ஸ் என்பது தனியாக கிடைக்காது.

ஆனால் ஓடிடி வருமானம் கிடைக்கும். அதில் இயக்குநருக்கு பங்கும் கிடைக்கும்.

தவிர இந்த 200 கோடி டாலர்களை எட்டிய பின்னர் தான் லாபத்தில் குறிப்பிட்ட விகிதம் ஜேம்ஸ் கேமரனுக்கு அளிக்கப்படும்.

அவதார் 2 - டிஸ்னி நிறுவனத்தின் வருமானம்?

அவதார் படம் மொத்தமாக 300 கோடி டாலர்கள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 200 கோடி போக தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர், முன்னணி நடிகர்களுக்கு லாபம் கிடைக்கும்.

டிஸ்னி நிறுவனத்துக்கு 50 கோடி டாலர்கள் கிடைத்தால் பெரிய விஷயம் என்கின்றனர். இந்திய மதிப்பில் 4,000 கோடி ரூபாய்.

Avatar 2 : ஜேம்ஸ் கேமரானின் சம்பளம் என்ன? - டிஸ்னியின் சாதனைப் படம் எவ்வளவு லாபமடையும்?
Avatar to The Batman : 2022-ன் சிறந்த Hollywood திரைப்படங்கள் எவை?

இது தவிர தீம் பார்க்குகள், வீடியோ கேம்கள், பொம்மைகள், லைசென்சிங் என பல வகைகளில் டிஸ்னி சம்பாதித்துவிடும்.

உதாரணமாக டிஸ்னியின் ஃப்ரோசான் திரைப்படம் 130 கோடி டாலர்கள் வசூல் செய்தது. அதே அளவு தொகையை டிஸ்னி தீம் பார்க்கள் மூலமாகவும் சம்பாதித்தது.

இப்படி பல வழிகளில் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதே ஹாலிவுட்டுக்கு பல்லாயிரம் கோடிகள் கொட்டி படமெடுக்கும் தைரியத்தைக் கொடுக்கின்றது.

Avatar 2 : ஜேம்ஸ் கேமரானின் சம்பளம் என்ன? - டிஸ்னியின் சாதனைப் படம் எவ்வளவு லாபமடையும்?
Avatar 2 : இதுதான் பிரம்மாண்டத்தின் உச்சம் - வெளியான அவதார் 2 புகைப்படங்கள் வைரல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com