"க்ரித்தி ஷெட்டி உடன் நடிக்க மாட்டேன்" கண்டிஷன் போட்ட விஜய் சேதுபதி - என்ன காரணம்?

தமிழ் தெலுங்கு என க்ரித்தி ஷெட்டிக்கு மார்கெட் நன்றாக இருக்கும் சமயத்தில், நடிகர் விஜய் சேதுபதி இவருடன் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
"க்ரித்தி ஷெட்டி உடன் நடிக்க மாட்டேன்" கண்டிஷன் போட்ட விஜய் சேதுபதி - என்ன காரணம்?
"க்ரித்தி ஷெட்டி உடன் நடிக்க மாட்டேன்" கண்டிஷன் போட்ட விஜய் சேதுபதி - என்ன காரணம்?twitter
Published on

நடிகை க்ரித்தி ஷெட்டியுடன் ஹீரோவாக நடிக்கமாட்டேன் என கண்டிஷன் போட்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் உப்பென்னா. சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதையும் வென்றது இந்த திரைப்படம். இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. தொடர்ந்து ஷியாம் சிங்க ராய், பங்காரு ராஜு போன்ற தெலுங்கு படங்களிலும் நடித்தார்

தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

தமிழ் தெலுங்கு என க்ரித்தி ஷெட்டிக்கு மார்கெட் நன்றாக இருக்கும் சமயத்தில், நடிகர் விஜய் சேதுபதி இவருடன் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

காரணம், உப்பென்னா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார் க்ரித்தி ஷெட்டி. இந்த படம் வெளியான பிறகு, விஜய் சேதுபதிக்கு அடுத்ததாக படவாய்ப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் இவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை அறிந்த விஜய் சேதுபதி அவரை ஹீரோயினாக நியமிக்க வேண்டாம் என படக்குழுவிடம் கேட்டிருக்கிறார்.

"க்ரித்தி ஷெட்டி உடன் நடிக்க மாட்டேன்" கண்டிஷன் போட்ட விஜய் சேதுபதி - என்ன காரணம்?
த்ரிஷாவுக்கு திருமணமா? மலையாள பட தயாரிப்பாளரை கரம் பிடிக்கிறாரா 96 பட நடிகை?

"உப்பென்னாவின் வெற்றிக்கு பிறகு எனக்கு தமிழ் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அதில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார் என்று தெரிந்துகொண்டேன்.

இதனால் படக்குழுவினரை உடனடியாக தொடர்பு கொண்டு, அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன்.

உப்பென்னாவில் அவரின் தந்தையாக நடித்துவிட்டு, மற்றொரு படத்தில் அவருடன் காதல் காட்சிகளில் நடிக்க என்னால் இயலாது" என்று தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

மேலும், உப்பென்னா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது என்னுடனான ஒரு காட்சியில் நடிக்க க்ரித்தி ஷெட்டி தயங்கினார். உன்னுடைய வயதில் எனக்கு ஒரு மகன் இருக்கிறான், தயங்காமல் நடிக்கலாம் என்று கூறினேன். அவர் எனக்கு மகளை போன்றவர். என்னுடைய கதாநாயகியாக அவரை பார்க்க இயலாது" என்றும் தெரிவித்தார்.

மகளாக, தங்கையாக நடித்த நடிகையுடன் டூயட் பாடுவது, இணையாக நடித்த ஹீரோயினுக்கு மகனாக நடிப்பது, சினிமாத் துறையில், ஏன் தமிழ் சினிமாவில் சகஜம் தான் என்றாலும், விஜய் சேதுபதியின் இந்த கண்ணோட்டம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது

"க்ரித்தி ஷெட்டி உடன் நடிக்க மாட்டேன்" கண்டிஷன் போட்ட விஜய் சேதுபதி - என்ன காரணம்?
Vijay Sethupathi : ஜப்பான் திரைப்பட விழாவில் தங்கம் வென்ற மாமனிதன் - நெகிழ்ந்த இயக்குநர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com