மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிந்து தற்போது ஆறாவது சீசன் ஆரம்பித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
தற்போது தான் நிகழ்ச்சியில் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதற்குள் போட்டியாளர்களுக்கு ஆதரவு, ஆர்மி என மக்கள் தங்களின் சப்போர்ட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த சீசன் துவங்கி இரண்டே நாட்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலமான ஜிபி முத்துவுக்கும் இலங்கையைச் சேர்ந்த ஜனனிக்கும் ஆர்மி உருவாகிவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜிபி முத்து.
டிக்டாக் இருந்த கால கட்டத்தில் இவர் தனது Keypad மொபைல் மற்றும் Headphone- களில் தென் மாவட்டங்களுக்கே உரிதான பாசையில் பேசி வீடியோக்களை பதிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
டிக்டாக் தடைசெய்யப்பட்ட பிறகு, யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். குறிப்பாக, அவருக்கு வந்து குவியும் கடிதங்களை அவர் படிக்கும் வீடியோக்கள், ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவை.
அதன் பின்னர் அவர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
பிக் பாஸின் கடந்த சீஸனிலேயே ஜி.பி. முத்து இடம்பெறுவார் எனப் பேச்சுகள் அடிபட்ட நிலையில், இந்த முறை அவரது அறிமுகம் ரசிகர்களிடம் பெறும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது
நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசன் ஆதாம் - ஏவாள் கதையைக் கூறியபோது, ஆதாம் என்றால் யார் என்று கேட்டு Thuglife கொடுத்தார்.
அவருடைய எளிய பேச்சு மக்களை கவர தொடங்கியுள்ளது #GPMuthuArmy என்ற ஹாஷ்டாகை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜி.பி. முத்துவுக்குப் போட்டியாக இலங்கையைச் சேர்ந்த ஜனனிக்கும் ரசிகர்கள் குவிந்து வருகிறது.
இலங்கையைச் சேர்ந்த ஜனனி, தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிந்தவர்.
21 வயதான இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பம் நீண்ட நாட்களாக இருந்து வந்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில்தான், #JananiArmy என்ற ஹாஷ்டாகைப் பயன்படுத்தி ஜனனிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வழக்கமாக, பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி சில நாட்களுக்குப் பிறகுதான் போட்டியாளர்களின் செயல்கள் கண்டு அவர்களுக்கு ஆர்மி என்ற பெயரில் ரசிகர் பட்டாளம் திரளும்
ஆனால், ஜி.பி. முத்துவுக்கும் ஜனனிக்கும் முதல் நாளே ரசிகர்கள் திரண்டிருக்கின்றனர்.
ஜி.பி. முத்து கலந்துகொள்வதன் காரணமாக, கடந்த எல்லா சீசன்களையும் விட, இந்த முறை பிக் பாஸ் நிழ்ச்சியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கின்றனர் சிலர்.
சிலர் ஜனனிக்கு என தனியான ட்விட்டர் பக்கங்களையும் துவங்கியுள்ளனர்.
சிலர், ஜி.பி. முத்து, ஜனனி ஆகிய இருவரில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என வாக்கெடுப்புகளையும் நடத்திவருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust