நிவேத்யா சங்கர் : அதிதி சங்கரை விட அதிக Followers - யார் இந்த 2k kid?

கண்டிப்பாக இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் உள்ளவர்கள் இவரைப் பார்க்காமல் இருந்திருக்கமாட்டார்கள்.
Nivedya. R. Sankar
Nivedya. R. SankarTwitter

டிக்டாக் தொடங்கி தற்போது 2K கிட்களுக்கான இணைய உலகமாக மாறிக்கொண்டிருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பலரது சினிமா கனவுகள் நனவாகிக் கொண்டிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் அடுத்த டிக்டாக்காக மாறி வருகிறது. முன்பெல்லாம் புகைப்படங்களை வெளியிடுவார்கள், தற்போது பாட்டுப் பாடுவது, நடனம் ஆடுவது, படங்களில் வரும் பிரபல சீன்களை ரீ கிரியேட் செய்வது என மணிக் கணக்கில் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

முதலில் ஒரு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை சாதாரணமாக ஓபன் செய்வது, பின் கன்டென்ட் என்ற பெயரில் வீடியோக்கள் போடுவது, அப்புறம் பாலோவர்கள் வந்தவுடன் பயோவில் Actor, Social Media Influencer, Digital Content Creator, DM For Collaboration என்று மாற்றிக்கொள்வது என படிப்படியாக இது முன்னேரும். அவர்களே இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அப்படி நீங்கள் இன்ஸ்டாகிராமை ஓபன் செய்யும் போது பல முகங்களைப் பார்த்திருப்பீர்கள். பிடித்திருக்கும், ஃபாலோ செய்திருப்பீர்கள்!

அந்த பட்டியலில் கண்டிப்பாக இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் உள்ளவர்கள் இவரைப் பார்க்காமல் இருந்திருக்கமாட்டார்கள்.

Nivedya. R. Sankar
இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் : கொந்தளித்த பிரபலங்கள் - ஏன் என்ன ஆச்சு? | Explained

யார் இந்த நிவேத்யா சங்கர்?

இன்ஸ்டா ரீல்களில் நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நிவேத்யா கேரளாவில் உள்ள நெய்யட்டின்கராவில் பிறந்தவர்.

பள்ளிப் படிப்பைப் படித்துக்கொண்டிருக்கும் இவருக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவரின் தந்தை சங்கர், தாயார் ரெம்யா சங்கர்.

பெற்றோர் ஆதரவு

நிவேத்யா சங்கர், இவ்வாறு தன்னுடைய வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட அவரின் தாயார் ஆதரவாக இருப்பதாகவும் அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். மேலும் Collaboration எல்லாம் தன்னுடைய அம்மா தான் பார்த்துக்கொள்வார் எனவும் நிவேத்யா கூறினார்.

Nivedya. R. Sankar
பவி டீச்சர் முதல் சிலகம்மா வரை - 90ஸ் கிட்ஸ் கிரஷ் பிரிகிடாவின் க்யூட் ஸ்டோரி

டிக்டாக் டூ இன்ஸ்டாகிராம்

சிறுவயதிலிருந்தே நடனம் மற்றும் நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் நிவெத்யா. முதலில் டிக்டாக்கில் தன்னுடைய முகத்தைக் காண்பிக்கத் தொடங்கிய நிவேத்யாவிற்கு அவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை. டிக்டாக்கை தடை செய்த பின் இன்ஸ்டாகிராமிற்கு தஞ்சம் புகுந்தார் நிவேத்யா.

2019ல் தனது முதல் வீடியோவை பதிவேற்றினார் நிவேத்யா. இவரின் வீடியோக்களை குறைந்த பார்வையாளர்களே பார்த்தனர். மனம் தளராமல் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்த நிவேத்யாவின் வீடியோ திடீரென வைரலானது.

முதல் மூன்று மாதங்களில், அவருக்கு 100k ஃபாலோயர்கள் வந்தனர். தன்னுடைய நடன வீடியோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதன் மூலம் ரசிகர்களைத் தன்வசப்படுத்தினார். தற்போது இன்ஸ்டாகிராமில் அவருக்கு 2.7 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

அதிதி சங்கரை விட அதிக ஃபாலோயர்ஸ்

முன்னணி இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கரை விட நிவேத்யா சங்கர் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை வைத்துள்ளார். அதிதியின் இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் 312K, ஆனால் அவரை விட கிட்டத்தட்ட 9 மடங்கு அதிகமான ஃபாலோயர்களை நிவேத்யா சங்கர் கொண்டுள்ளார்.

Nivedya. R. Sankar
Amala Shaji : பிரியங்கா மோகனை விட அதிக Followers; யார் இந்த 2K கிட்ஸ்லின் Reels க்ரஷ் ?

நிவேத்யாவின் முதல் ஆல்பம் பாடல்

இன்ஸ்டாகிராமில் பிரபலமடைந்ததை தொடர்ந்து ஆல்பம் பாடலில் நடிக்கத் தொடங்கினார் நிவேத்யா.

‘ஓர்மயில் ஒரு பொன்னான நாள்’ என்பது இவரின் முதல் ஆல்பம் பாடல். ஆகஸ்ட் 21, 2021 அன்று இந்த பாடல் வெளியாகி தற்போது வரை 80,000 பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

நிவேத்யாவிற்கு பிடித்தவை

பிடித்த உணவு - பிரியாணி

பிடித்த நடிகை - சமந்தா

பிடித்த நடிகர் - விஜய்

பிடித்த நிறம் - சிவப்பு

Nivedya. R. Sankar
TTF வாசன்: 2K கிட்ஸ் கொண்டாடும் இந்த பைக்கர் யார்? | Podcast

கூகுள் சர்ச்சில் நிவேத்யா

புகைப்படத்திலிருக்கும் கேள்விகள் தான் கூகுளில் நிவேத்யா குறித்து அதிகம் தேடப்பட்டவை. அவரது இன்ஸ்டாகிராம், புகைப்படங்கள் எல்லாம் மேலிருக்கும் வீடியோக்களை க்ளிக் செய்து பார்க்கலாம். 2005ம் ஆண்டு பிறந்த அவருக்கு இப்போது 16 வயது. nivedyanivyy_official என்ற பெயரில் தான் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கிறது.

இவ்வளவு பெரிய Fandom ஐ எப்படி இந்த வயதில் சமாளிக்கிறார்கள்? இந்த வயதில் இது தேவையா என்ற கேள்விகள் எல்லாம் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் குழந்தை நட்சத்திரங்களை போன்று தான் இவர்களையும் பார்க்க வேண்டியுள்ளது. சினிமாவில் நடிக்க வேண்டுமென்பதற்கான நிவேத்யாவின் முயற்சியை அவரின் பெற்றோர்கள் ஆதரிக்கின்றனர். 18 வயது வரையிலும் பெற்றோரின் ஆதரவுடன் அவர்களின் கைகளில் இருக்கும் வரை எதுவும் ஆரோக்கியமானதாக இருக்கும் எனலாம்.

Nivedya. R. Sankar
Irfan's View : எவ்வளவு வருமானம் தெரியுமா? - இர்ஃபானின் ஒரு ஜாலி கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com