”விக்னேஷ் சிவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” உறவினர்கள் புகார் - என்ன காரணம்?

விக்னேஷ் சிவனின் தாய் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
”விக்னேஷ் சிவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” உறவினர்கள் புகார் - என்ன காரணம்?
”விக்னேஷ் சிவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” உறவினர்கள் புகார் - என்ன காரணம்?Twitter

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், 2015-ம் ஆண்டு நானும் ரௌடிதான் படத்தில் இணைந்து பணியாற்றியத்திலிருந்தே காதலித்து வந்தனர்.

அவர்கள் 2021 ஆம் ஆண்டில் தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்தனர். 9 ஜூன் 2022 அன்று மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

Nayanthara - vignesh
Nayanthara - vigneshTwitter

இந்த ஜோடிக்கு 9 அக்டோபர் 2022 அன்று வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. என்னதான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களின் வேலையை மட்டும் பார்த்து வந்தாலும், அவர்களுக்கென பிரச்னைகள் வந்துக்கொண்டே தான் இருக்கிறது.

திருமணம் முடிந்த கையுடன், திருப்பதி கோவில் வளாகத்தில் செருப்பு அணிந்ததாக சர்ச்சை எழுந்தது, அதன் பின்னர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது ஒரு சர்ச்சையானது. இப்படி சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்தது.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது அவர்களது உறவினர்கள் திருச்சி, லால்குடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.

அதாவது, லால்குடியில் உள்ள விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் மற்றும் கோயம்பத்தூரில் வசித்து வரும் குஞ்சிதபாதம் அவரது மனைவி சரோஜா ஆகியோர் புகார் மனு கொடுக்க வந்துள்ளனர்.

”விக்னேஷ் சிவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” உறவினர்கள் புகார் - என்ன காரணம்?
நயன்தாரா - விக்னேஷ் சிவன் : வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றனரா? சட்டம் சொல்வது என்ன?
விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்Twitter

தங்களது சொத்தில் வில்லங்கம் உள்ளதால் சொத்தை விற்று கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் சொத்தை விற்க வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர் வந்து வில்லங்கத்தை தீர்க்க வேண்டும் என லால்குடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாக மனு கொடுக்க வந்த உறவினர் ஒருவர் கூறியிருக்கிறார்.

மேலும் விக்னேஷ் சிவனின் தாய் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

”விக்னேஷ் சிவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” உறவினர்கள் புகார் - என்ன காரணம்?
Nayanthara: திருப்பதியில் காலணி அணிந்தது முதல் குழந்தை பெற்றது வரை- நடிகையின் 5 சர்ச்சைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com