Chennai floods: நிவாரண பொருட்கள் வழங்கி சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா - என்ன நடந்தது?
Chennai floods: நிவாரண பொருட்கள் வழங்கி சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா - என்ன நடந்தது?Twitter

Chennai floods: நிவாரண பொருட்கள் வழங்கி சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா - என்ன நடந்தது?

நடிகை நயன்தாராவும் தனது 'பெமி 9' (Femi 9) நிறுவனத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். சென்னை வேளச்சேரி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 'பெமி 9' நிறுவனத்தின் சார்பாக சானிட்டரி நாப்கின்கள், தண்ணீர் பாட்டில்கள், உணவு என வழங்கப்பட்டது.
Published on

மிக்ஜாம் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கனமழை பெய்து வெள்ளம் ஆர்பரித்தது. இதனால் பல இடங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு சார்பில் செய்து வந்தாலும், தன்னார்வலர்கள், சினிமா பிரபலங்கள் இணைந்து கைக்கோர்த்துள்ளனர்.

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

சின்னத்திரை நட்சத்திரங்கள் பாலா, அறந்தாங்கி நிஷா, இயக்குநர் பார்த்திபன் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

நடிகை நயன்தாராவும் தனது 'பெமி 9' (Femi 9) நிறுவனத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். சென்னை வேளச்சேரி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 'பெமி 9' நிறுவனத்தின் சார்பாக சானிட்டரி நாப்கின்கள், தண்ணீர் பாட்டில்கள், உணவு என வழங்கப்பட்டது.

அந்த நிவாரண பொருட்கள் 'பெமி 9' நிறுவனத்தின் விளம்பர பலகைகள் இடம்பெற்றிருந்த வாகனத்தில் தான் எடுத்து செல்லப்பட்டது.

Chennai floods: நிவாரண பொருட்கள் வழங்கி சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா - என்ன நடந்தது?
Chennai: 10ம் தேதி வருகிறதா அடுத்த புயல்? Fact Check

இதுகுறித்த வீடியோவை 'பெமி 9' நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அந்த வீடியோவின் கடைசியில் பெண்கள் சிலர் நயன்தாராவுக்கு நன்றி தெரிவிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தன.

நிவாரண பொருட்களை வழங்கியதோடு விடாமல் பாதிக்கப்பட்டவர்களை வீடியோவாக எடுத்துள்ளனர், இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட நிறுவனத்திற்கு விளம்பரம் தேவையா? என்று நயன்தாராவை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் மற்றொரு தரப்பினரோ, விளம்பரம் இருந்தாலும் மக்களுக்கு உதவும் மனப்பான்மை வேண்டும் என்று நயன்தாராவுக்கு ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Chennai floods: நிவாரண பொருட்கள் வழங்கி சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா - என்ன நடந்தது?
Chennai Floods: 'புயலுக்கு பின் அவலம்' - தலைநகரின் நிலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com