ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் திடீரென நடிகை தீபிகா படுகோன் மயங்கி விழுந்துள்ளார்.
மாடல் அழகியாக தன்னுடைய திரைப் பயணத்தைத் தொடங்கிய தீபிகா படுகோன் 16 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வலம் வருகிறார்.
தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘புரொஜெக்ட் கே’ படத்தில் பிரபாஸின் ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் திடீரென நடிகை தீபிகா படுகோன் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த படக்குழு அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள காமினேனி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தீபிகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இதயத்துடிப்பு அதிகரித்தன் காரணமாக மயங்கி விழுந்ததாகக் கூறியுள்ளனர்.
சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலத்தில் முன்னேற்றம் அடைந்து, இதயத் துடிப்பு சீரானதையடுத்து சிறிது ஓய்வெடுத்த பின் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்குத் திரும்பியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust