Dhanush 50: தனுஷ் இயக்கி நடிக்கும் பெரிய பட்ஜெட் படம்- உடன் நடிக்கும் நட்சத்திரங்கள் யார்?

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் எனவும் இது வட சென்னை பகுதி சார்ந்த கேங்ஸ்டர் படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Dhanush 50: தனுஷ் இயக்கி நடிக்கும் பெரிய பட்ஜெட் படம்- உடன் நடிக்கும் நட்சத்திரங்கள் யார்?
Dhanush 50: தனுஷ் இயக்கி நடிக்கும் பெரிய பட்ஜெட் படம்- உடன் நடிக்கும் நட்சத்திரங்கள் யார்?Twitter

தனுஷ் நடிக்கும் அவரது 50வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது உறுதியாகியிருக்கிறது. கடைசியாக சன் பிக்சர்ஸுடன் அவர் இணைந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் 50வது படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் எனக் கூறப்படுகிறது. இதில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான் நடிக்க உள்ளது உறுதியாகியிருப்பதாக இந்தியா டுடே வலைத்தளம் கூறுகிறது.

இந்த படத்தை தனுஷே இயக்குவார் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. படத்துக்கு ராயன் என தலைப்பு வைக்க வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் எனவும் இது வட சென்னை பகுதி சார்ந்த கேங்ஸ்டர் படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக கூறியது போல பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் பெரிய நடிகர் பட்டாளமும் இணையவுள்ளது. தனுஷ், சந்தீப் கிஷன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சகோதரர்களாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

துஷாரா விஜயன், விஷ்ணு விஷால் முக்கிய பாத்திரங்களில் நடிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

Dhanush 50: தனுஷ் இயக்கி நடிக்கும் பெரிய பட்ஜெட் படம்- உடன் நடிக்கும் நட்சத்திரங்கள் யார்?
Thalapathy 68: 20 ஆண்டுகளுக்கு பின் இணையும் யுவன் - விஜய்; வந்தது அடுத்த படத்தின் அப்டேட்!

இப்போது கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக தனது படத்துக்கான பணிகளைத் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது. 

அருண் மாத்தேஸ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லர் படத்திலும் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் ஜான் கொக்கென் ஆகியோர் நடிக்கின்றனர். 

அடுத்தடுத்து ஹிட் படங்களை தனுஷ் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்!

Dhanush 50: தனுஷ் இயக்கி நடிக்கும் பெரிய பட்ஜெட் படம்- உடன் நடிக்கும் நட்சத்திரங்கள் யார்?
IMDb: பாலிவுட்டை பின்னுக்கு தள்ளிய தனுஷ்: 2022ன் டாப் 10 இந்திய பிரபலங்கள் யார் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com