Vetrimaran: ”விஜய்யுடன் நிச்சயம் படம் பண்ணுவேன்” சூப்பர் அப்டேட் கொடுத்த விடுதலை இயக்குநர்

நா என் கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடிச்சுட்டு அவரோட படம் பண்ணுவேன். அந்த நேரத்துல என்னோட கதை அவருக்கு பிடிச்சா, நிச்சயமாக நாங்க படம் பண்ணுவோம்
Vetrimaran: ”விஜய்யுடன் நிச்சயம் படம் பண்ணுவேன்” சூப்பர் அப்டேட் கொடுத்த விடுதலை இயக்குநர்
Vetrimaran: ”விஜய்யுடன் நிச்சயம் படம் பண்ணுவேன்” சூப்பர் அப்டேட் கொடுத்த விடுதலை இயக்குநர்ட்விட்டர்
Published on

நடிகர் விஜய்யுடன் நிச்சயமாக இணைவேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

பொல்லாதவன், ஆடுகளம், விடுதலை உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். தமிழ் சினிமாவின் தேசிய விருது வென்ற இயக்குநர்களில் ஒருவர்.

வழக்கமான கமர்ஷியல் படங்கள் அல்லாது, சமூக நீதியை பறைச்சாற்றுகின்ற, ஆழமான கருத்துகளையுடை, முற்போக்கு சிந்தனைகள் உடைய, உருக்கமான படங்களுக்கு பெயர்பெற்றவர்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் விடுதலை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் வெற்றிமாறனை எப்போது சந்தித்தாலும் கேட்கப்படும் கேள்விகள், வட சென்னை இரண்டாம் பாகம், விடுதலை இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்பது தான்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறனிடம் தொகுப்பாளரும் இதே கேள்விகளை கேட்டிருந்தார், அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், தான் நிச்சயம் விஜய்யுடனும் இணைவதாக கூறியுள்ளார்.

வெற்றிமாறன் கூறியதாவது, “வடச்சென்னை 2 வரும். வேறு இரண்டு படங்களின் வேலைகள் நடந்துவருவதால் நிச்சயம் அதற்கு பிறகு வட சென்னை 2வை எதிர்பார்க்கலாம்” என்றார்

தொடர்ந்து நிருபர் வெற்றிமாறனிடம் நீங்கள் விஜய்யுடன் இணைவீர்களா, கதை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, “நாங்க ரொம்ப நாள படம் பண்ணணும்னு பேசிட்டு தான் இருக்கோம். விஜய் சாரும் ரெடியா தான் இருக்காரு.

நா என் கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடிச்சுட்டு அவரோட படம் பண்ணுவேன். அந்த நேரத்துல என்னோட கதை அவருக்கு பிடிச்சா, நிச்சயமாக நாங்க படம் பண்ணுவோம்” என்றார்.

Vetrimaran: ”விஜய்யுடன் நிச்சயம் படம் பண்ணுவேன்” சூப்பர் அப்டேட் கொடுத்த விடுதலை இயக்குநர்
”தென்னிந்திய படங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்” - இயக்குநர் வெற்றிமாறன் பேசியது என்ன?

மேலும் விடுதலை படத்தில் நடிகர் சூரியை நடிக்கவைத்தது எப்படி எனக் கேட்கபட்டது. அதற்கு பதிலளித்தவர்,சூரியுடன் தான் என் அடுத்த படம் என்பது அசுரன் படத்தின்போதே முடிவுசெய்யப்பட்டது என்றார்.

இரண்டு மூன்று புத்தகங்கள் வாசித்து அவற்றில் ஒன்றினை தேர்ந்தெடுக்கலாம் என்றிருந்தேன், கைக்கூடியது ஜெயமோகனின் ‘துணைவன்’ கதை தான் என்றார்.

வாடிவாசல் திரைப்படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், அனிமேஷன் பணிகள் முடிந்தால் அந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படும் என்றார் வெற்றிமாறன்

Vetrimaran: ”விஜய்யுடன் நிச்சயம் படம் பண்ணுவேன்” சூப்பர் அப்டேட் கொடுத்த விடுதலை இயக்குநர்
Vetrimaran: ”ஒரு நாளைக்கு 180 சிகரெட் பிடிப்பேன்” - வைரலாகும் இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com