Tamannaah: உலகின் 5வது பெரிய வைரக் கல்லுக்கு சொந்தக்காரரா தமன்னா? | Fact Check

இந்த திரைப்படத்தில் தமன்னாவின் நடிப்பை பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட உபாசனா கோனிடெலா அவருக்கு இந்த வைரக் கல்லை பரிசளித்துள்ளார். தமன்னா கையில் அந்த வைரம் பதித்த மோதிரத்தை போட்டிருக்கும் புகைப்படத்தை உபாசனா ட்வீட்டும் செய்திருந்தார்.
Tamannaah: உலகின் 5வது பெரிய வைரக் கல்லுக்கு சொந்தக்காரரா தமன்னா? | Fact Check
Tamannaah: உலகின் 5வது பெரிய வைரக் கல்லுக்கு சொந்தக்காரரா தமன்னா? | Fact CheckTwitter

உலகின் ஐந்தாவது பெரிய வைரக் கல் நடிகை தமன்னாவிடம் இருக்கிறது என்றும், அதனை தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி அவருக்கு பரிசளித்தார் என்று கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வலம் வந்தன.

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்திருக்கிறார் நடிகை தமன்னா பாட்டியா.

உலகின் ஐந்தாவது பெரிய வைரம்

இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்தியா ஹெரால்ட், டி என் ஏ உள்ளிட்ட முன்னணி செய்தி தளங்களில் ஒரு செய்தி வெளியானது.

நடிகை தமன்னா உலகின் ஐந்தாவது பெரிய வைரக்கல்லுக்கு சொந்தக்காரர் என்றும், இதனை நடிகர் ராம் சரண் தேஜாவின் மனைவி உபாசனா காமினேனி அவருக்கு பரிசளித்தார் என்று அச்செய்தி குறிப்பிட்டது.

இந்த வைரத்தின் மதிப்பு சுமார் 2 கோடி என்று கூறப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு தமன்னா சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் காதலியாக நடித்திருந்தார்.

Tamannaah
TamannaahTwitter

இந்த திரைப்படத்தில் தமன்னாவின் நடிப்பை பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட உபாசனா கோனிடெலா அவருக்கு இந்த வைரக் கல்லை பரிசளித்துள்ளார். உபாசனா நடிகர் சிரஞ்சீவியின் மருமகள். மேலும் இந்த திரைப்படத்தினை அவரது கணவர் ராம் சரண் தயாரித்திருந்தார்.

தமன்னா கையில் அந்த வைரம் பதித்த மோதிரத்தை போட்டிருக்கும் புகைப்படத்தை உபாசனா ட்வீட்டும் செய்திருந்தார்.

இந்த புகைப்படம் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வந்தது. மேலும் தமன்னாவிடம் இருக்கும் மற்ற வைரக்கற்கள் பற்றிய தகவல்களும் பகிரப்பட்டன. நடிகை தமன்னா, தி ஓப்பன்ஹைமர் ப்ளூ டயமண்ட் ரிங், தி கிராஃப் பிங்க், தி கல்லினன் ட்ரீம் மற்றும் பிங்க் ஸ்டார் உள்ளிட்ட வைரக் கற்களுக்கும் சொந்தக்காரர் என்று டி என் ஏ செய்து தளம் குறிப்பிடுகிறது.

Tamannaah: உலகின் 5வது பெரிய வைரக் கல்லுக்கு சொந்தக்காரரா தமன்னா? | Fact Check
CoronaXBB: இந்தியாவில் புதிய தொற்று? Fake News என உறுதிப்படுத்திய சுகாதார துறை| Fact Check

அது ஒரு பாட்டில் ஓப்பனர்!

இந்நிலையில், இந்த செய்திகள் குறித்து விளக்கமளித்திருக்கிறார் நடிகை தமன்னா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்தவர், அது ஒரு பாட்டில் ஓப்பனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

“Hate to break it to you but we were doing a photo shoot with a bottle opener and not an actual diamond #GirlsLikeToClickPics.” என்று கூறியிருந்தார்.

நடிகை தமன்னா தற்போது தமிழில் ரஜினிகாந்த்துடன் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

Tamannaah: உலகின் 5வது பெரிய வைரக் கல்லுக்கு சொந்தக்காரரா தமன்னா? | Fact Check
அஜித் பட நடிகைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் - வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன? Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com