ஜி.மாரிமுத்து : உணவகங்களில் பணியாளராக வேலை செய்தவர் சினிமாவில் சாதித்தது எப்படி?

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மாரிமுத்து, சின்னத்திரைக்கு எண்ட்ரி கொடுத்தார். எதிர் நீச்சல் எனும் சீரியல் மூலம் இன்னும் பிரபலமானார். இவரின் அடையாளமாக ‘இந்தா மா ஏய்’ என்னும் டையலாக் ஆனது. எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியை காட்டிலும் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.
ஜி.மாரிமுத்து : உணவகங்களில் பணியாளராக வேலை செய்தவர் சினிமாவில் சாதித்தது எப்படி?
ஜி.மாரிமுத்து : உணவகங்களில் பணியாளராக வேலை செய்தவர் சினிமாவில் சாதித்தது எப்படி?Twitter

‘இந்தா மா ஏய்’ என்ற வசனத்தின் மூலம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமானவர் தான் மாரிமுத்து. இவர் உதவி இயக்குநராக, இயக்குநராக, நடிகராக பல பரிமாணங்களில் சினிமாவில் பணியாற்றியிருக்கிறார்.

உணவகங்களில் பணியாளராக வேலை செய்த இவர் எப்படி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். அவர் கடந்து வந்த பாதை!

மாரிமுத்து தேனி மாவட்டத்தின் பசுமலை கிராமத்தைச் சேர்ந்தவர். சினிமா மீதான ஆர்வம் இவரை சொந்த ஊரில் இருக்க விடவில்லை. திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று 1990 ஆம் ஆண்டு, தனது வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவந்தார்.

இதுபோன்று சினிமாவில் சாதிக்க எண்ணிய பலர் சென்னைக்கு கிளம்பி வருவார்கள், ஆனால் ஆரம்பத்தில் அவர்கள் படும் இன்னல்களுக்கு அளவே இருக்காது. மாரிமுத்துவும் சென்னைக்கு வந்த ஆரம்பத்தில் உணவகங்களில் பணியாளராக வேலை செய்தார்.

பின்னர் எப்படியோ நடிகர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக இணைந்தார். அவரது படங்களான அரண்மனைக்கிளி (1993), எல்லாமே என் ராசாதான் (1995) படங்களில் பணிபுரிந்தார்.

அதன் பின்னர் பாடலாசிரியர் வைரமுத்துக்கு உதவியாளராக பணிபுரிந்தார். பின்னர் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

சிலம்பராசனின் மன்மதன் படத்திலும் இணை இயக்குநராக பணியாற்றினார். கண்ணும் கண்ணும் படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.

மாரிமுத்து பின்னர் மலையாள திரைப்படமான சப்பா குரிஷு படத்தின் கதையைக் கொண்டு புலிவால் படத்தை உருவாக்கினார்.

2010 களில், இவர் நடிப்புத் தொழிலில் கவனம் செலுத்தி, தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்தார். மிஷ்கின் இவரை யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார்.

அதில் அவர் ஊழல் நிறைந்த காவல் அதிகாரியாக நடித்திருந்தார். படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆரோகணம், நிமிர்ந்து நில் , கொம்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பெரும்பாலும் காவல் அதிகாரியாக நடித்தார்.

விஷாலின் மருது படத்தில் இவரது நடிப்பானது இவரை கத்தி சண்டை படத்தில் ஒப்பந்தம் செய்ய தூண்டுதலானது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் இவரது கதாபாத்திரம், இவரின் நடிப்பு கவனம் பெற்றது.

ஜி.மாரிமுத்து : உணவகங்களில் பணியாளராக வேலை செய்தவர் சினிமாவில் சாதித்தது எப்படி?
அரவக்குறிச்சி டூ அமெரிக்கா : நாசாவிற்கு செல்லும் அரசு பள்ளி மாணவி ஷோபனா - யார் இவர்?

கடைசியாக நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்திலும் நடித்திருந்தார்.

இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மாரிமுத்து, சின்னத்திரைக்கு எண்ட்ரி கொடுத்தார். எதிர் நீச்சல் எனும் சீரியல் மூலம் இன்னும் பிரபலமானார். இவரின் அடையாளமாக ‘இந்தா மா ஏய்’ என்னும் டையலாக் ஆனது. எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியை காட்டிலும் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று, அதிக ரசிகர்களையும் இவர் பக்கம் கொண்டு வந்தது.

இவரின் ஏராளமான தக் லைப் மீம்களையும் ஷேர் செய்து நெட்டிசன்கள் இவரை கொண்டாடி வந்த நிலையில், தற்போது இவர் மறைந்த சோக செய்தியையும் வருத்ததுடன் பதிவிட்டு வருகின்றன.

ஜி.மாரிமுத்து : உணவகங்களில் பணியாளராக வேலை செய்தவர் சினிமாவில் சாதித்தது எப்படி?
மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த கீதா கைலாசம் - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com