Adipurush: தியேட்டரில் FDFS பார்க்க வந்த குரங்கு - ”ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷமிட்ட ரசிகர்கள்!

இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. திரைப்படம் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பங்களில் வெளியாகியுள்ளது.
Adipurush: தியேட்டரில் FDFS பார்க்க வந்த குரங்கு - ”ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷமிட்ட ரசிகர்கள்!
Adipurush: தியேட்டரில் FDFS பார்க்க வந்த குரங்கு - ”ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷமிட்ட ரசிகர்கள்!Twitter
Published on

ஆதிபுருஷ் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கம் ஒன்றில் குரங்கு ஒன்று வந்து படம் பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், க்ரித்தி சனான், சைஃப் அலி கான் நடித்துள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இந்தியாவின் இதிகாச நூல்களில் ஒன்றான ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே இத்திரைப்படத்துகான பிரமோஷன்கள் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. திரைப்படம் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பங்களில் வெளியாகியுள்ளது

படத்தினை விளம்பரப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டனர். படத்தின் இயக்குநர் ஓம் ராவத் ஆதிபுருஷ் திரையிடப்படும் திரையரங்கங்களில் ஒவ்வொரு காட்சியின்போதும் ‘ஹனுமாருக்கு’ ஒரு இருக்கை ஒதுக்கவேண்டும் என தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

Adipurush: தியேட்டரில் FDFS பார்க்க வந்த குரங்கு - ”ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷமிட்ட ரசிகர்கள்!
Adipurush : கேலி மற்றும் சர்ச்சையில் சிக்கிய ஆதிபுருஷ் டீசர் - விரிவான தகவல்கள்

அவரது கோரிக்கைக்கு இணங்க திரையரங்கில் சீட்டும் ஒதுக்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இன்று ஆதிபுருஷ் படம் வெளியான தியேட்டர் ஒன்றில் குரங்கு ஒன்று வந்து படம் பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குரங்கு திரையரங்கில் இருப்பதை கவனித்த ரசிகர்களும் ஹனுமார் தான் படம் பார்க்க வந்துள்ளார் என, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட தொடங்கினர். இந்த சம்பவம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

ஆதிபுருஷ் திரைப்படம் அதன் மோசமான விஎஃப் எக்ஸ் வேலைபாடுகளுக்காக முதலில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி, பின்னர் மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் உடன் டிரெய்லர் வெளியானது குறிப்பிடத்தக்கது

Adipurush: தியேட்டரில் FDFS பார்க்க வந்த குரங்கு - ”ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷமிட்ட ரசிகர்கள்!
நரேந்திர மோடி: இந்திய பிரதமருடன் பானி பூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர் | Viral Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com