Adipurush : கேலி மற்றும் சர்ச்சையில் சிக்கிய ஆதிபுருஷ் டீசர் - விரிவான தகவல்கள்

"எங்கள் மத நூல்களில், ஹனுமானின் உடைகள் குறித்து தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் டீசரில் அவர் தோல் ஆடை அணிந்திருப்பதை போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நூல்களில் எழுதப்பட்டவை சரியானது என்று நாங்கள் நம்புகிறோம்," என்று நரோட்டம் மிஸ்ரா கூறினார்.
Adipurush Teaser
Adipurush TeaserTwitter
Published on

மத்தியப் பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, விரைவில் வெளிவரவிருக்கும் ஆதிபுருஷ் படத்தில் இந்துக் கடவுள்களின் சித்தரிப்பு குறித்து விமர்சித்துள்ளார்.

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'.

ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும், சீதை கதாபாத்திரத்தில் க்ரித்தி சனோனும், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலி கானும் நடித்துள்ளனர்.

2023 ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி ஆதிபுருஷ் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டத்தை அடுத்து படத்தின் டீசர் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியானது.

Adipurush
Adipurush Twitter
Summary

டீசர் வெளியானது முதல் கிராபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ், அனிமேஷன்கள் பரவலாக நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வந்தன. இணையத்தை ஆதிபுருஷ் டீசர் குறித்த மீம்கள் ஆக்கிரமித்தன.

ஆதிபுருஷ் படத்தின் டீசர் கேலிகளுக்கு தான் உள்ளாகியுள்ளது என்றால் தற்போது சர்ச்சையிலும் சிக்கியுள்ளது.

'ஆதிபுருஷ்' டீசரில் சீதை, அனுமன், ராவணன் உள்ளிட்டோர் சித்தரிக்கப்பட்டிருப்பது குறித்து மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா விமர்சித்துள்ளார்.

மேலும் பெரும்பான்மை சமூகத்தின் மதத்தை மட்டும் ஏன் படங்களில் குறிவைக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நரோட்டம் மிஸ்ரா கூறுகையில்,

ஆதிபுருஷ் டீசரில் அனுமன், சீதை மற்றும் ராவணன் சித்தரிக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

"எங்கள் மத நூல்களில், ஹனுமானின் உடைகள் குறித்து தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் டீசரில் அவர் தோல் ஆடை அணிந்திருப்பதை போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நூல்களில் எழுதப்பட்டவை சரியானது என்று நாங்கள் நம்புகிறோம்," என்று நரோட்டம் மிஸ்ரா கூறினார்.

Adipurush Teaser
Adipurush : "சேட்டிலைட் உரிமைகளை வாங்கிய சுட்டி டிவி" - வைரலாகும் மீம்ஸ்

ஏன் ஒரே ஒரு மதம் மட்டும் குறிவைக்கப்படுகிறது?

ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவர்கள் மாற்றம் செய்துள்ளனர். சீதையின் கதாபாத்திரம் மற்றும் அவர் உடை அணியும் விதம் கூட மாற்றப்பட்டுள்ளது.

திரைப்படங்களை பொறுத்தவரை மற்ற மதங்கள் என்று வரும்போது, படைப்பாளிகள் படைப்பு சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கிறார்கள் என்றார்.

மேலும் "ஏன் ஒரே ஒரு மதம் மட்டும் குறிவைக்கப்படுகிறது? பாபா மகாகலில் சோமேட்டோ விளம்பரம், ராதாவில் சன்னி லியோனின் பாடல், காளி படத்தின் போஸ்டர், ஓ மை காட் படம், ஆஸ்ரம் வெப் சீரிஸ். ஏன் நாம் மட்டும் (இந்துக்கள்) குறிவைக்கப்படுகிறோம்” எனவும் நரோட்டம் மிஸ்ரா கேள்வி எழுப்பினார்.

Adipurush Teaser
வெற்றிமாறன்: "ராஜராஜ சோழன் இந்து மன்னர் இல்லை" - ஆதரவும், எதிர்ப்பும்!

டிவிட்டர் டிரெண்டிங்கில் #BanAdipurush

இதனையடுத்து டிவிட்டரில் Ban Adipurush என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

ஏறக்குறைய 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள ஆதிபுருஷ், ஜனவரி 12, 2023 அன்று பிரமாண்டமாக வெளியிட தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com