சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகி சுந்தரிக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைத்துவிடுவதால், ரசிகர்களிடமிருந்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
படிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட கிராமத்துப் பெண் சுந்தரியும், பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கார்த்திக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமண பந்தத்தில் நுழைகிறார்கள். கார்த்திக்கின் அக்காவுக்கு, முருகன் இக்கட்டான சூழலில் வாழ்க்கை கொடுக்கிறார். இதனால் முருகனின் நெருங்கிய நண்பரின் மகளான சுந்தரியை கார்த்திக் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான். ஆனால் சுந்தரி மீது ஆரம்பம் முதலே வெறுப்பைக் காட்டுகிறார். யாருக்கும் தெரியாமல் சென்னைக்குச் சென்று பணக்காரப் பெண்ணான அணுவைத் திருமணம் செய்து கொள்கிறார். சுந்தரியும் கலெக்டர் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வருகிறார். கொஞ்ச நாட்களில் கார்த்திக் அணுவைத் திருமணம் செய்திருப்பது தெரிந்து விடுகிறது. நிறம் குறைவாக இருப்பதால் உன்னைப் பிடிக்கவில்லை என சுந்தரியிடம் சொல்கிறார் கார்த்திக். உடைந்து போன சுந்தரிக்கு அவரின் ஹவுஸ் ஓனர் அக்கா ஆறுதலாக இருக்கிறார். சுந்தரிக்கு அணுவைப் பிடிக்கும் என்பதால், அவர் கர்ப்பமான விஷயம் தெரிந்து, சந்தோஷப்படுகிறார். கார்த்திக் தனக்கு செய்த துரோகத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறார்.
சுந்தரிக்குச் சித்து நல்ல நண்பராக இருக்கிறார். இது ஆரம்பத்திலிருந்தே கார்த்திக்குப் பிடிக்கவில்லை. சுந்தரிக்குத் திருமணம் ஆனது தெரியாமல் சித்து காதலிக்கிறார். இதனால் சித்துவின் அப்பா சுந்தரியின் குடும்பத்தாரிடம் பெண் கேட்க முடிவெடுக்கிறார். எதேச்சையாக கார்த்திக்கிடமே சுந்தரியை சித்துக்குப் பெண் கேட்க வேண்டும், அவளின் அப்பா யார் என்று கேட்க, கார்த்திக் சித்துவைப் பழிவாங்கும் எண்ணத்தில் முருகனை கை காட்டி விடுகிறார். நேற்றைய எபிசோடில் சித்துவின் அப்பா, முருகனிடம் சென்று சுந்தரியைப் பெண் கேட்கக் கலவரம் வெடிக்கிறது. முருகன் சித்துவின் அப்பாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். சித்துவின் அப்பா ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்பதால் இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது.
`` பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? ஒரு ஆண் திருமணம் ஆனது தெரியாமல் பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை கேட்டிருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்குமா? ஆணின் படிப்பை நிறுத்தி ஊருக்கு அழைத்து செல்வார்களா? பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?’’
முருகனை போலீஸ் கைது செய்கிறது. இதற்கிடையில் சுந்தரியைத் தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடிய குடும்பம், திருமணம் ஆனதை சித்துவிடம் மறைத்துப் பழகியதாகத் திட்டி தீர்க்கின்றனர். இதனால் மனமுடைந்து போகிறார் சுந்தரி, தன் மாமாவை ரிலீஸ் செய்ய வேண்டி, சித்துவின் அப்பாவிடமே செல்கிறார். அங்குச் சென்று சித்துவைக் கடுமையாகத் திட்டுகிறார். அதன் பிறகு முருகனை போலீஸார் விடுவிக்கின்றனர். சுந்தரியைச் சென்னையிலிருந்து ஊருக்கு அழைத்துச் செல்கின்றனர். இதற்கிடையில் சுந்தரி, தன் ஹவுஸ் ஓனர் அம்மாவிடம்,
`` பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? ஒரு ஆண் திருமணம் ஆனது தெரியாமல் பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை கேட்டிருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்குமா? ஆணின் படிப்பை நிறுத்தி ஊருக்கு அழைத்து செல்வார்களா? பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?’’ என்று கூறி கதறி அழுகிறார். இதனை முருகன் கேட்டு விடுகிறார்.
சுந்தரி ஊருக்குச் செல்லும் விவரத்தை அறிந்த சித்து, தன் அப்பாவை அழைத்துக் கொண்டு, சுந்தரியின் படிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது என்று கூறி அவர்களைப் பாதியில் நிறுத்த கிளம்புகிறார். அவர்களை ஃபாலோ செய்து கோயிலில் வழிமறித்து மன்னிப்பு கேட்கிறார். நான் ஊரைவிட்டு போயிட்றேன். நான் கலெக்டர் ஆகல. சுந்தரி சென்னையில் படிக்கட்டும்’’ என்று உருக்கமாக மன்னிப்பு கேட்கிறார்.
மனம் மாறிய முருகன், தன் மருமகள் சுந்தரியைச் சென்னையில் தங்கி படிக்க அனுமதிக்கிறார். அதுமட்டுமின்றி சுந்தரியை அழைத்துக் கொண்டு சித்து வீட்டுக்குச் சென்று, உங்கள் நட்பு தொடர வேண்டும், இனி எந்த குழப்பமும் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள்’’ என்கிறார். இது தான் ஆரோக்கியமான கதைக்களம். ஆண் பெண் நட்பை உயர்வாகப் பேசும் வசனங்கள் அருமை. திருமணமான பெண் என்று தெரியாமல் சித்து காதலிக்கிறார், தெரிந்த பின்னர் மன்னிப்பு கோருகிறார். அந்த மன்னிப்பை, பெண்ணின் குடும்பம் ஏற்றுக் கொண்டு மீண்டும் நட்பை தொடர அனுமதிப்பது செம டிவிஸ்டு.
சித்து-சுந்தரி நட்பு மீண்டும் துளிர்க்கும். அதே போன்று கார்த்திக்கின் திருட்டுத்தனங்களையும் அனுவின் அம்மா கொஞ்சம் கொஞ்சமாகக் கண்டுபிடித்துக் கொண்டு வருகிறார். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!