தெலுங்கு நடிகர் ராணாவுடன் இணைந்து சாய் பல்லவி விராட பர்வம் படத்தில் நடித்திருக்கிறார். இதற்கான புரோமோசன் வேலைகளில் ராணாவும் இவரும் பயங்கர பிஸியில் இருக்கிறார்கள். இந்த படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் யூடியூப் புரோமோசனுக்கான ஒரு நேர்காணலில் சாய் பல்லவியிடம் இடது சாரிகளின் நடவடிக்கைகளால் தாக்கம் உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, தான் எந்த பக்கத்திற்கும் சாயாதவர் என்றும் அவரை அவரது வீட்டில் யாருக்கு ஆபத்தென்றாலும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி தான் வளர்த்திருக்கிறார்கள் என்றும் கூறினார். மேலும் இடது மற்றும் வலது சாரிகளைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், யார் சரி தவறு என்று சொல்ல முடியாது என்றார்.
மேலும் அதற்கு காஷ்மீர் பைல்ஸ் படத்தையும் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் மேற்கோள்காட்டி அவர் அளித்த பதில் சர்ச்சையாகியுள்ளது.
மார்ச் மாதம் வெளியான காஷ்மீர் பைல்ஸ் படம், இந்தியாவில் மிகப் பெரிய அரசியல் விவாதமாக மாறியது. படத்தில் ஜம்மு காஷ்மீர் வன்முறையின் போது இந்து பண்டிதர்கள் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, வெளியேற்றப்படுவதுபோல காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.
"காஷ்மீர் பைல்ஸ் படத்தில் வரும் காட்சிகளை மத மோதலாக மாற்றியிருக்கிறார்கள். என்றால், சமீபத்தில் பசுக்களை வாகனத்தில் வைத்து ஒருவர் எடுத்து சென்றார். அவர் இஸ்லாமியாரக இருக்க, அவரை தாக்கி, பின் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட வைத்தார்கள். அன்று நடந்ததற்கும் இதற்கும் என்ன வேறுபாடு உள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.
"நாம் முதலில் நல்ல மனிதர்களாக இருக்கவேண்டும். அப்படியிருந்தால் நாம் யாரையும் புண்படுத்தமாட்டோம்" என்று கூறிய சாய் பல்லவி ஒருவர் நல்லவராக இல்லை என்றால் நியாயம் இரண்டு பக்கத்திலும் இருக்காது என்றார்.
தான் ஒரு நடுநிலைவாதி என்று குறிப்பிட்ட சாய் பல்லவி, "நீங்கள் என்னைவிட பலசாலி என்று நினைத்து என்னை ஒடுக்கப்பார்த்தால், நீங்கள் தவற்றின் பக்கம் இருக்கிறீர்கள். நிறைய பேர் சேர்ந்து ஒரு சிறிய சமூகத்தை தாக்குவது நியாயமல்ல. யுத்தம் என்பது இரு சம பலம் கொண்டவர்களுக்கு இடையில் நடக்கவேண்டும்" என்றார்.
சாய் பல்லவியின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இதற்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது. காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சலுகைகள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust