Jailer ரிலீஸ்: அடிக்கடி இமயமலை செல்லும் ரஜினி - என்ன தான் இருக்கிறது அந்த பாபாஜி குகையில்?

அங்கு ஒரு வாரக் காலம் தங்கவுள்ளதாகவும், அவருக்கு நெருக்கமான சிலரும் உடன் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் ஒரு முறை இமயமலைக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Jailer படம் ரிலீஸ்: இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த் - இந்த பாபா குகையின் பின்னணி என்ன?
Jailer படம் ரிலீஸ்: இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த் - இந்த பாபா குகையின் பின்னணி என்ன? twitter
Published on

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் படம் வெளியாகவுள்ள நிலையில், தனது இமயமலை பயணத்தை நடிகர் ரஜினிகாந்த் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த், அவ்வப்போது இமயமலைக்கு சென்று வருவார் என்பது நாம் அறிந்ததே. குறிப்பாக தான் நடிக்கும் ஒரு படத்தின் ஷூட் முடிந்த பின்னர் மற்றும், புதிய படம் ஏதேனும் தொடங்குவதற்கு முன் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வார்.

இது தனக்கு மன அமைதியை கொடுக்கும் ஒரு செயல் என அவர் கூறியுள்ளார்.

உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் சில ஆண்டுகளாக செல்லாமல் இருந்தவர், காலா திரைப்படம் முடிந்த பின்னர் செல்ல தொடங்கினார். தர்பார், அண்ணாத்த வெளியீட்டுக்கு முன் சென்றுவந்தவர் தற்போது ஜெயிலர் வெளியாகவுள்ளதால், இமயமலைக்கு செல்கிறார்.

அங்கு ஒரு வாரக் காலம் தங்கவுள்ளதாகவும், அவருக்கு நெருக்கமான சிலரும் உடன் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் ஒரு முறை இமயமலைக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jailer படம் ரிலீஸ்: இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த் - இந்த பாபா குகையின் பின்னணி என்ன?
Rajinikanth : வருகிறார் முத்துவேல் பாண்டியன் ! இன்று வெளியாகிறது ஜெயிலர் அப்டேட்

எங்கே இருக்கிறது இந்த பாபாஜி குகை?

இமயமலையில் அமைந்துள்ள பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்து வருவார் நடிகர் ரஜினிகாந்த். இது குறித்த புகைப்படங்களையும் நாம் பார்த்திருப்போம்.

இந்த குகையானது உத்தரகண்ட் மாநிலம், துரோணகிரி மலையில் அமைந்திருக்கிறது. பல பக்தர்கள் ஞானிகளை ஈர்க்கும் பிரபலமான குகை இது.

Jailer படம் ரிலீஸ்: இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த் - இந்த பாபா குகையின் பின்னணி என்ன?
Jailer : மிரட்டலாக வெளியான ரஜினியின் ஜெயிலர் டிரெய்லர் - நெட்டிசன்கள் ரியாக்ஷன்ஸ் என்ன?

யார் இந்த பாபாஜி?

மகாவதார் பாபாஜியை நினைத்து தியானம் செய்யவே நடிகர் ரஜினிகாந்த் இந்த குகைக்கு செல்கிறார். இந்த மகாவதார் பாபாஜி பற்றி எந்த விதமான தகவல்களும் நம்மிடம் இல்லை.

இவரது சிஷ்யரான பரமஹம்ச யோகானந்தாஸ் என்பவரின் சுயசரிதையில் மகாவதார் பாபாஜி பற்றி சில குறிப்புகள் எழுதியுள்ளார். அதன்படி, மகாவதார் பாபாஜி சாகாவரம் கொண்டவர் என்றும், அவர் மிகவும் இளமையானவர் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் கடலூரில், இரண்டாம் நூற்றாண்டில் இவர் பிறந்தார் எனவும், இன்றும் இமயமலையில் இவர் வலம் வந்துகொண்டிருக்கிறார் என்றும் அந்த சுயசரிதை கூறுகிறது. கடலூரில் இவர் பிறந்த வீடு இன்னும் இருக்கிறது. 1861-65 வரை, இமயமலையில் பாபாஜி தென்பட்டதாகவும் கூறுகின்றனர்

ரஜினிகாந்த்தின் மானசீக குரு

1978ல் ரஜினிகாந்த்தின் நண்பர் ஒருவர், பாபாஜி பற்றிய புத்தகத்தை அவருக்கு பரிசளித்துள்ளார். ஆனால், தனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாததால் அந்த புத்தகத்தை நடிகர் 1999ல் தான் படித்தாக இந்தியா டுடே தளம் கூறுகிறது.

புத்தகத்தை படிக்கும்போது தனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அதன் பின்னரே இவரை பின்பற்ற தொடங்கியதாகவும் ரஜினி கூறியிருக்கிறார்.

குகைக்கு எப்படி செல்வது?

விமானம் அல்லது ரயில் மூலம் தலைநகர் டெல்லியை அடையவேண்டும். டெல்லியில் இருந்து காத்கோட்டிற்கு ரயிலில் பயணித்து, அதன் பின்னர் அங்கிருந்து ராணிகேட்டிற்கு செல்லவேண்டும். ராணிகேட்டிலிருந்து துரோணகிரி பர்வதம் 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. சாலை மார்கமாக செல்லலாம்.

இந்த பாபாஜி குகையில், ஒரு சமயத்தில் இரு நபர்கள் மட்டுமே அமர்ந்து தியானம் செய்ய இயலும்.

Jailer படம் ரிலீஸ்: இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த் - இந்த பாபா குகையின் பின்னணி என்ன?
ரஜினிகாந்த் : ரசிகர் கொடுத்த தாமரையை வாங்கிய Rajini - அரசியல் சாயம் பூசிய நெட்டிசன்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com