Rajinikanth : வருகிறார் முத்துவேல் பாண்டியன் ! இன்று வெளியாகிறது ஜெயிலர் அப்டேட்

4 தசாப்தங்களுக்கும் மேல் கடந்து இன்றும் ரசிகர்களை எண்டெர்டெயின் செய்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த்தின் 169வது படம் ஜெயிலர். முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
Rajinikanth : வருகிறார் முத்துவேல் பாண்டியன் ! இன்று வெளியாகிறது ஜெயிலர் அப்டேட்
Rajinikanth : வருகிறார் முத்துவேல் பாண்டியன் ! இன்று வெளியாகிறது ஜெயிலர் அப்டேட்Twitter
Published on

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அப்டேட் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் ட்விட்டரில் #ரஜினிகாந்த், #ஜெயிலர் ஆகிய வார்த்தைகள் டிரெண்டிங்கில் உள்ளன.

1975ல் வெளியான அபூர்வ ராகங்கள் இவரது முதல் படம். அதில் வில்லனாக அறிமுகப்படுத்தப்படார் ரஜினி.

4 தசாப்தங்களுக்கும் மேல் கடந்து இன்றும் ரசிகர்களை எண்டெர்டெயின் செய்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த்தின் 169வது படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, இசையமைபாளர் அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர் படத்தில், முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிடவுள்ளது படக்குழு.

Rajinikanth : வருகிறார் முத்துவேல் பாண்டியன் ! இன்று வெளியாகிறது ஜெயிலர் அப்டேட்
ரஜினிகாந்த் 170 : போனி கபூர் தயாரிப்பில் நெருப்புடா அருண்ராஜாவுடன் ரஜினி இணைவதாக தகவல்

ரஜினிகாந்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து, ”12.12.2022, மாலை 6 மணிக்கு முத்துவேல் பாண்டிய வருகிறார்” என அறிவிப்பு கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இந்த பதிவை சரியாக டிசம்பர் 12 நள்ளிரவு 12 மணிக்கு அந்நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியது. முத்துவேல் பாண்டியனின் க்ளிம்ப்ஸ் வெளியாகலாம் என்று யூகிக்கப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியொர் நடிக்கின்றனர். கன்னட திரைப்பிரபலம் சிவ ராஜ்குமாரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது

Rajinikanth : வருகிறார் முத்துவேல் பாண்டியன் ! இன்று வெளியாகிறது ஜெயிலர் அப்டேட்
ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் சன் பிக்சர்ஸ் - யாருக்கு எவ்வளவு சம்பளம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com