Kamal Haasan: அமிதாப் பச்சன், பிரபாஸுடன் இணையும் உலக நாயகன் - வில்லன் கதாபாத்திரமா?

பிராஜெக்ட் கே - வில் நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. நடிகர்கள் பிரபாஸ், தீபிகா படுக்கோன் மற்றும் அமிதாப் பச்சன் இப்படத்தில் நடிக்கின்றனர் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கமல் ஹாசனும் இப்படத்தில் இணைகிறார் என படக்குழு அறிவித்துள்ளது.
Kamal Haasan: அமிதாப் பச்சன், பிரபாஸுடன் இணையும் உலக நாயகன் - வில்லன் கதாபாத்திரமா?
Kamal Haasan: அமிதாப் பச்சன், பிரபாஸுடன் இணையும் உலக நாயகன் - வில்லன் கதாபாத்திரமா?ட்விட்டர்
Published on

தமிழ் திரையுலகின் அடையாளங்களான ரஜினிகாந்த்தும் கமல் ஹாசனும் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் கைக்கோர்க்கவுள்ளனர்.

இது தனித் தனி படமாக இருந்தாலும், சினிமா ரசிகர்களுக்கு இன்பச் செய்தியாக தான் வந்திருக்கிறது.

தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் இணைகிறார் உலக நாயகன் கமல் ஹாசன்

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்டிவிட்டர்

வைஜயந்தி தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் பிராஜெக்ட் கே. இதனை இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை படமான மஹானட்டியை இயக்கியவர். இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

பிராஜெக்ட் கே - வில் நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. நடிகர்கள் பிரபாஸ், தீபிகா படுக்கோன் மற்றும் அமிதாப் பச்சன் இப்படத்தில் நடிக்கின்றனர் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கமல் ஹாசனும் இப்படத்தில் இணைகிறார் என படக்குழு அறிவித்துள்ளது.

ட்விட்டரில், "உலகநாயகன் கமல் ஹாசனை வரவேற்கிறோம். எங்கள் பயணம் தற்போது உலகமயமானது"

தகவல்களின்படி நடிகர் கமல்ஹாசன் இதில் நெகட்டிவ் ரோலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரை பார்த்திடாத கதாபாத்திரத்தில் கமல் ஹாசனை பார்க்கலாம் என்றும் கூறியுள்ளனர். அதிக பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படத்தில் கிராஃபிக்ஸ் பெரும் பங்காற்றும் என்று கூறியுள்ளனர்.

Kamal Haasan: அமிதாப் பச்சன், பிரபாஸுடன் இணையும் உலக நாயகன் - வில்லன் கதாபாத்திரமா?
கமல்ஹாசன்: ”இதனால் தான் ’ஹே ராம்’ எடுத்தேன்” ராகுல் காந்தியை சந்தித்த கமல்- என்ன பேசினார்?

ஏற்கனவே 70 முதல் 75 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தீபிகாவுக்கும் அமிதாப் பச்சனுக்கும் இன்னும் சில நாட்களுக்கு படப்பிடிப்பு மீதமுள்ளது.

இந்தியா டுடே தளத்தின் அறிக்கையின்படி இந்த திரைப்படத்துக்காக கமல் ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்குவுள்ளனர். இது பிரபாஸ் சம்பளத்தைவிட இரு மடங்கு.

ஜனவரி 2024ல் திரைப்படம் வெளியாகும். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Kamal Haasan: அமிதாப் பச்சன், பிரபாஸுடன் இணையும் உலக நாயகன் - வில்லன் கதாபாத்திரமா?
கமல், வெற்றிமாறன், விஜய் சேதுபதி - ரோகிணி திரையரங்க விவகாரத்தில் கொதித்தெழுந்த பிரபலங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com