மகாத்மா காந்தியிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக தான் ஹே ராம் படமாக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன்.
சமீபத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்றார் நடிகர் கமல் ஹாசன். ”நான் வேறு கட்சியை சார்ந்தவனாக இருந்தாலும், இந்தியா என்று வரும்போது அந்த பேதங்கள் மறைந்து விட வேண்டும். அந்த வித்தியாசங்களை துறந்து தான் நான் இங்கு வந்துள்ளேன்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்று ஒரு வாரம் கடந்த பிறகு, கமல் ஹாசனும், ராகுல் காந்தியும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அப்போது பேசிய கமல் ஹாசன், ஹே ராம் திரைப்படம் மூலம் தான் காந்தியிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்திருக்கிறார்.
”வணக்கம் கமல்” என தலைப்பிடப்பட்டுள்ள இந்த கலந்துரையாடல், ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. சீனா, உலக அரசியல், படங்கள் குறித்த பல தரப்பட்ட கருத்துக்களை இருவரும் பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
அப்போது பேசிய கமல் ஹாசன், முதலில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் மீது தனக்கு தவறான புரிதலே இருந்தது எனக் கூறினார்.
“நான் என் பதின் பருவத்தில் காந்தியின் கடும் விமர்சகனாக இருந்தேன். எனக்கு 24-25 வயதாகும் போது காந்தி யார் என்பதை நான் சுயமாக அறிந்துகொண்டேன்.
வருடங்கள் செல்ல, அவரை அளவுக்கு அதிகமாக ரசிக்கத் தொடங்கிவிட்டேன். அதனால் தான் காந்தியிடம் நான் மன்னிப்பு கேட்க ஹே ராம் படத்தை எடுத்தேன்” என்றார்
இந்தியாவில் நிலவி வரும் இந்தி திணிப்பு குறித்து கூறுகையில், “எல்லோரையும் போல நாங்களும் எங்கள் மொழியின் (தமிழ்) மீது கர்வம் கொண்டிருக்கிறோம். மதம் சாராத, இறையச்சம் இல்லாதவர்களும் தமிழைக் கொண்டாடுகிறார்கள்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust