Thug life Kamal : மருதநாயகம் கமலிடம் என்னென்ன கார்கள் இருக்கிறது தெரியுமா?

அறிக்கையின்படி, கமல்ஹாசனின் மொத்த சென்னை ரியல் எஸ்டேட் சொத்துக்கள், அவரது வணிக கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துக்கள் உட்பட மொத்தம் 92.5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Kamal Haasan’s Net Worth: High-End Cars And Lavish Lifestyle
Kamal Haasan’s Net Worth: High-End Cars And Lavish LifestyleTwitter
Published on

கமல்ஹாசன் தனது சினிமா வாழ்க்கையை சிறு வயதிலேயே தொடங்கிவிட்டார். ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னை மெருகேற்றி அசுர நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

ஒரு நடிகனாக மட்டுமல்லாமல், இயக்குநர், கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், நடனக்கலைஞர், வசனகர்த்தா என பன்முகத்தன்மை கொண்ட இவரை உலக சினிமா கொண்டாடுகிறது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம், பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்தது. மேலும் இந்த திரைப்படம் அந்த ஆண்டு இந்தியாவில் மிகப்பெரிய வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது. தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன்7-ஐ தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்தில் மணிரத்னம் , கமல் ஹாசன் இணைந்திருக்கும் தக் லைஃப் படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ வெளியானது.

ஏற்கனவே நாயகன் படத்தை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த நிலையில் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அசையா சொத்துக்கள் மட்டும் ரூ. 131 கோடி இருப்பதாகவும், அதில் ரூ.17 கோடி மதிப்புக்கு விவசாய நிலங்கள் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Kamal Haasan’s Net Worth: High-End Cars And Lavish Lifestyle
HBD Kamal Haasan: IMDb படி பார்க்கவேண்டிய 10 கமல் ஹாசன் படங்கள் என்ன?

சென்னையில் சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு ஆடம்பர மாளிகையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அறிக்கையின்படி, கமல்ஹாசனின் மொத்த சென்னை ரியல் எஸ்டேட் சொத்துக்கள், அவரது வணிக கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துக்கள் உட்பட மொத்தம் 92.5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுக்கு இந்தியாவில் மட்டுமின்றி, இங்கிலாந்திலும் பதிவு செய்யப்பட்ட சொத்துகள் உள்ளன.

கமல்ஹாசனின் கார் கலெக்‌ஷன்

இவரிடம் டீலக்ஸ் லெக்சஸ் எல்எக்ஸ் 570 மற்றும் பிஎம்டபிள்யூ 730எல்டி உள்ளிட்ட பல உயர்தர வாகனங்கள் உள்ளன, இவை அனைத்தும் அவரது கேரேஜில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர Mercedes-Benz Maybach S-Class, Range Rover Autobiography கார் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kamal Haasan’s Net Worth: High-End Cars And Lavish Lifestyle
ரஜினி - கமல் : நேரடியாக மோதிக் கொண்ட படங்கள் - வென்றது யார்? | முழுமையான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com