கார்கில் வெற்றி நாள்: விஜய் திவாஸ் நாயகர்களைக் கொண்டாடும் திரைப்படங்கள்

1999ம் ஆண்டு லடாக்கில் நடைபெற்ற போரின் 23வது ஆண்டு நினைவாக இன்று நாடு முழுவதும் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கார்கில் நாயகர்களைக் கொண்டாடும் விதமாக எடுக்கப்பட்ட சில திரைப்படங்களைக் காணலாம்.
movies
moviesTwitter
Published on

கார்கில் போரில் பாகிஸ்தான் படைகளை எதிர்த்து வெற்றி பெற்ற இந்திய வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஜூலை 26ம் தேதி விஜய் திவாஸ் அல்லது கார்கில் வெற்றி நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

1999ம் ஆண்டு லடாக்கில் நடைபெற்ற போரின் 23வது ஆண்டு நினைவாக இன்று நாடு முழுவதும் கார்கில் வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் கார்கில் நாயகர்களைக் கொண்டாடும் விதமாக எடுக்கப்பட்ட சில திரைப்படங்களைக் காணலாம்.

LOC - Kargil

2003ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் முழுவதுமாக கார்கில் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. பல நாயகர்களைக் கொண்ட திரைக்கதை அமைப்புடன் இந்திய வீரர்களின் வீரம் மற்றும் தைரியத்தைப் பறைசாற்றுவதாக இருக்கும்.

ஜெ.பி.டுட்டா இயக்கிய இந்த படத்தில் சஞ்சய் தத், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன், நாகார்ஜுனா, அசுதோஷ் ராணா, சைஃப் அலிகான், ரவீனா டாண்டன், ராணி முகர்ஜி, இஷா தியோல், மஹிமா சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Shershaah

கடந்த ஆண்டு வெளியான ஷேர்ஷா திரைப்படம் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த கேப்டன் விக்ரம் பத்ரா என்பவரைப் பற்றியது.

ஜூலை7, 1999ல் தனது சக வீரரைக் காப்பாற்றியதோடு பாகிஸ்தான் படைகள் வசமிருந்த point 48755ஐக் மீட்டார் கேப்டன் விக்ரம் பத்ரா.

அவரின் வீரம், தியாகம், நாட்டுப்பற்றுடன் தனிப்பட்ட வாழ்வையும் காதலுடன் கண்முன்னே காட்சிகளாக விவரித்தது இந்த திரைப்படம்.

சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி நடித்த இந்த திரைப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. போருக்குப் பின்னர் கேப்டன் விக்ரம் பரம் வீர் சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gunjan Saxena: The Kargil Girl

போரில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண் விமானியின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் Gunjan Saxena. இது ஒரு நம்ப முடியாத வாழ்வைப் படமாக்கிய முயற்சி என்று தான் கூற வேண்டும்.

கார்கில் போரில் அதீத தைரியத்தை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு சௌர்யா வீர் பட்டம் வழங்கப்பட்டது.

ஷரண் சர்மா இயக்கிய இந்த படத்தில் ஜான்வி கபூர், அங்கத் பேடி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

போர், பாலின அடக்குமுறை ஆகியவற்றுடன் இந்த படத்தின் தந்தை - மகள் உறவை வெளிப்படுத்தும் காட்சிகளும் மக்கள் மனதில் இடம் பெற்றன.

movies
உலக சினிமா: 2000ம் ஆண்டுக்கு பின்னர் வெளியான 25 சிறந்த 'த்ரில்லர்' திரைப்படங்கள் | IMDB

Lakshya

ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் Lakshya. இரு இளைஞன் இராணுவத்தில் சேர ஆசைப்படுவதிலிருந்து கார்கில் போரில் தனது விமானியாகும் பயணத்தைக் காட்சிப்படுத்தியது இந்த திரைப்படம்.

ஃபர்ஹான் அக்தர் இயக்கிய இந்த படத்தில் அமிதாப்பச்சன், ப்ரீத்தி ஜிந்தா, போமன் இரானி மற்றும் ஓம் பூரி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

movies
உலகச் சினிமா : Downfall டூ Pianist - 55 சிறந்த சுயசரிதை திரைப்படங்கள்

Dhoop

கார்கில் போரின் முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்ட கேப்டன் அனுஜ் நாயரின் பயணமே இந்த திரைப்படமாகும். அஷ்வினி சௌத்ரி இயக்கிய இந்த திரைப்படத்தில் ஓம் பூரி, ரேவதி, சஞ்சய் சூரி மற்றும் குல் பனாக் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

movies
செளதி அரேபியா ஏமன் போர் வரலாறு : இப்போது அங்கு நடப்பது என்ன? - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com