கீரவாணி: ஆஸ்கர் வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர்; இந்திய இசையின் பாகுபலி - இவரது கதை என்ன? 

தெலுங்கில் கீரவாணி, தமிழில் மரகதமணி மற்றும் இந்தியில் க்ரீம் என மூன்று பெயர்களில் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர், பாடகர் எனப் பல அவதாரங்களை எடுத்துள்ளார். இவரது முதல் படம் வெளியாகவே இல்லை என்றாலும் தளராமல் தாளங்கள் வழி ரசிகர்களை வென்றார்.
கீரவாணி : ஆஸ்கர் வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர்; இந்திய இசையின் பாகுபலி - இவரதுகதை என்ன? 
கீரவாணி : ஆஸ்கர் வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர்; இந்திய இசையின் பாகுபலி - இவரதுகதை என்ன? Twitter
Published on

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்தபடியாக ஆஸ்கர் விருது வென்று சாதனைப் படைத்துள்ளார் இந்திய இசையமைப்பாளர் கீரவாணி.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இந்த ஆண்டின் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற விருதை வென்றதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள கீரவாணி யார்? அவரது பயணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1961ம் ஆண்டு பிறந்தவர் எம்.எம்.கீரவாணி.

இவரது தந்தை சிவசக்தி தத்தா ஒரு பாடலாசிரியர். இசை மீதான பிரியத்தின் காரணமாக இவருக்கு கீரவாணி எனப் பெயர் வைத்தாராம்.

மெலடி பாடல்கள் தான் ரசிகர்களின் இதயத்தில் என்றென்றும் நிற்கும்

அறிமுகம்

தெலுங்கு இசையமைப்பாளரான சக்கரவர்த்தியிடம் உதவியாளராக சேர்ந்தார்.

1990ம் ஆண்டு கல்கி என்ற தெலுங்கு படத்திற்கு இசையமைத்தார். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை.

அடுத்ததாக மௌலி இயக்கத்தில் வெளியான 'மனசு மகாத்மா' என்ற படம் தான் அவர் இசையில் வெளியான முதல் படமாக அமைந்தது.

அடுத்த ஆண்டே 'சீதாராமையா காரி மனவராலூ' என்ற படத்தில் இவரது இசை கவனிக்கப்பட்டது.

RRR Music Director Keeravani
RRR Music Director Keeravani

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 'ஷனா ஷனம்' என்ற படத்தின் மூலம் மக்களின் மனதை வென்றார் கீரவாணி.

அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தன. பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார் கீரவாணி.

என்ன தான் நாட்டு நாட்டு என்ற துள்ளல் இசைப்பாடல் அவருக்கு ஆஸ்கர் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தாலும் மெலடி பாடல்கள் தான் அவரது ஸ்ட்ராங் சோன்.

மெலடி பாடல்கள் தான் ரசிகர்களின் இதயத்தில் என்றென்றும் நிற்கும் என நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.

மரகதமணி - கீரவாணி

1990ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் அழகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

முதல் படத்திலேயே "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா", "சாதி மல்லி" போன்ற பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தமிழில் மரகதமணி என்ற பெயரில் பணியாற்றினார்.

கே.பாலசந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவும் பல படங்களுக்கு இசையமைத்தார்.

அர்ஜுன் இயக்கி நடித்த சேவகன், பாட்டொன்று கேட்டேன், கொண்டாட்டம் ஆகிய படங்களிலும் இசையமைத்தார்.

தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான 'மாவீரன்', 'நான் ஈ', 'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய படங்களின் மூலம் தமிழில் 2k கிட்ஸ்களுக்கும் அறிமுகமானார்.

க்ரீம்

1994ம் ஆண்டு கிரிமினல் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

இந்தியில் க்ரீம் என்ற பெயரில் பணியாற்றினார்.  சர்: தி மெலடி ஆஃப் லைஃப் என்ற படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களின் அன்பை சம்பாதித்தார்.

இந்தியில் 26 படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறார்.

"இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் என்பதைக் காட்டிலும் பாடலாசிரியர் எனக் கூறுவதையே பெருமையாக உணருகிறேன்"

கீரவாணியின் தந்தை சிவசக்தி தத்தாவின் சகோதரர் தான் ராஜ மௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாந்த். இருவரும் நெருங்கிய உறவினர்கள்.

ஸ்டூடன்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் 2001ம் ஆண்டு அறிமுகமானது முதல், ராஜமௌலியின் அனைத்து படங்களிலும் கீரவாணியே இசையமைத்துள்ளார்.

மகாதீரா, நான் ஈ, பாகுபலி, பாகுபலி-2 படங்கள் பெற்றுத்தந்த வரவேற்பு குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த கூட்டணியே பல விருதுகளைப் பெற்றுள்ளன.

கீரவாணியின் பன்முகத்தன்மை

இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளைக் கொண்டவர் கீரவாணி.

15 தெலுங்கு படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தெலுங்கில் பிரபல பாடலாசிரியரான வெட்டூரி சுந்தர ராமமூர்த்தியே தனது குரு எனக் கூறியுள்ளார்.

"இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் என்பதைக் காட்டிலும் பாடலாசிரியர் எனக் கூறுவதையே பெருமையாக உணருகிறேன்" எனவும் நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.

இலக்கியத்தில் அதிகம் ஆர்வம் உள்ள இவர், திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாமல் சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.

கீரவாணி : ஆஸ்கர் வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர்; இந்திய இசையின் பாகுபலி - இவரதுகதை என்ன? 
Oscars 2023 : பதோர் பாஞ்சாலி முதல் ஜல்லிக்கட்டு - ஆஸ்கர் பெற தகுதியான 10 இந்திய படங்கள்

கீரவாணி பெற்றுள்ள விருதுகள்

1991- அழகன் திரைப்படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது

1997- அன்னமய்யா என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக தேசிய விருது

சிறந்த இசைக்கான ஆந்திர அரசின் நந்தி விருது - 11 முறை

கீரவாணி : ஆஸ்கர் வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர்; இந்திய இசையின் பாகுபலி - இவரதுகதை என்ன? 
நாட்டு நாட்டு பட்ஜெட்: ஆர்ஆர்ஆர் பாடலுடன் பட்ஜெட்டை ஒப்பிட்ட ஹர்ஷ் கோயின்கா - என்ன காரணம்?

ஃபிலிம் பேர் விருது - 13 முறை

சிறந்த பாடலாசிரியருக்கான ஃபிலிம் பேர் விருது பாகுபலி-2 படத்துக்காக

2022 - நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் விருது

2023 - நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது

கீரவாணி : ஆஸ்கர் வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர்; இந்திய இசையின் பாகுபலி - இவரதுகதை என்ன? 
நாட்டு நாட்டு: எப்படி உருவானது இந்த ஆர் ஆர் ஆர் பாடல்? ஒரு சுவாரஸ்ய பின்னணி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com