நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு கூத்து பாடலுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார் தொழிலதிபர் ஹர்ஷ் கோயின்கா.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் 2023 - 24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அந்த பட்ஜெட்டில் சில பொருட்களுக்கு சுங்கவரி அதிகரிப்புக்கான விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, சிகரெட், கிச்சன் சிம்னிகள் உள்ளிட்டவைகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும்,அதே நேரம், டிவி, ஆட்டோமொபைல் பாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மிக முக்கியமாக வருமான வரி செலுத்துபவர்களுக்கு உச்சவரம்பு 7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை போன்ற வார்த்தைகளை நிதியமைச்சர் தனது பட்ஜெட்டில் பயன்படுத்தவில்லை என முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்த பட்ஜெட்டை ’நாட்டு நாட்டு பட்ஜெட்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் தொழிலதிபர் ஹர்ஷவர்தன் கோயின்கா.
ஆர்பிஜி நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் கோயின்கா. ஆர்பிஜி ஒரு இந்திய தொழில்துறை மற்றும் சேவைகள் கூட்டமைப்பு நிறுவனமாகும். ஹர்ஷ் கோயின்கா இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர், மற்றும் ஆனந்த் மஹிந்திராவைப் போலவே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கூட்டுத்தொடர் குறித்தும் அவர் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்
தன் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருந்த ஹர்ஷ் கோயின்கா, இந்த பட்ஜெட் தனது நிறுவனத்திற்கு ஏன் சாதகமானது என்று தெரிவித்திருந்தார்.
”நாங்கள் ஆர்பிஜியில் இந்த பட்ஜெட்டை விரும்புவது ஏன்? இது ஆர் ஆர் ஆர் என்பதால்!
Railways
Renewables
Reforms
கோல்டன் கிளோப் விருதை கைப்பற்ற தேசத்துகான ‘நாட்டு நாட்டு’ பட்ஜெட்” என்று சிலேடைகளால் விளையாடியிருந்தார் ஹர்ஷ் கோயின்கா!
நேற்று தாக்கலான பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் அவருக்கு ஆர் ஆர் ஆர் படத்தை நினைவுப்படுத்தியிருக்கிறது
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம், இந்தியா மட்டுமல்லாது உலகளவில் புகழ்பெற்றது. மேலும் ஆஸ்கர், கோல்டன் கிளோப் விருதுகளுக்கு பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust