Leo : விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன் - என்ன காரணம் தெரியுமா?
Leo : விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன் - என்ன காரணம் தெரியுமா?Twitter

Leo : விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன் - என்ன காரணம் தெரியுமா?

இதற்கிடையில் நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”எதை விட்டு தள்ளுவது என்பதை அறிவதே கலை” என ரூமியின் தத்துவத்தை பதிவிட்டிருந்தார். விக்னேஷ் சிவனுகாக தான் இந்த பதிவு எனவும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த பதிவுகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published on

விஜய் ரசிகர்களிடம் இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டுள்ளார். லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வந்தபோது அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் #LEO என்ற ஹேஷ்டேக்கை வைத்திருந்தார். பின்னர் அவர் நீக்கியதால் அவருக்கும் விஜய்க்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் பரவின.

சத்தியன் ராமசாமி என்பவர் X பக்கத்தில், ”லோகேஷ் சார் உங்களுக்கும் விஜய்க்கும் நான் ரெடி பாடலுக்கு பின்னர் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியும்.

நீங்கள் எதற்காக #Leo ஹேஷ் டேக்கை நீக்கினீர்கள் என்றும் எங்களுக்கு தெரியும். அதன்பின்னர் விஜய்யின் பெயரை நீங்கள் எங்கும் படத்தின் புரொமோஷனுக்காக பயன்படுத்தவில்லை” என்று கூறியிருந்தார்.

விஜய்க்கு எதிரான இந்த பதிவை இயக்குநர் விக்னேஷ் சிவன் லைக் செய்திருந்ததால், விஜய் ரசிகர்கள் அவர் மீது பொங்கி எழுந்தனர்.

லைகா புரொடக்சன் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த படத்திலிருந்து விக்னேஷ் விலகினார். நீங்கள் அஜித் ரசிகர் தானே அதனால் தான் லைக் செய்ததாக விக்னேஷ் சிவனை கடுமையாக விமர்சித்து ஆயிரக்கணக்கான பதிவுகள் பதிவிட்டனர்.

இதனால் விக்னேஷ் சிவன் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

”அன்பான விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களே... குழப்பம் ஏற்பட்டதற்கு மன்னிக்கவும். மெசேஜையும், அதில் உள்ள தகவலையும் பார்க்காமல் லைக் செய்து விட்டேன். லோகேஷ் கனகராஜின் வீடியோ என்றதும் லைக் செய்தேன்”

Leo : விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன் - என்ன காரணம் தெரியுமா?
அஜித் பட வாய்ப்பை விக்னேஷ் சிவன் தவறவிட்டது ஏன், AK62 என்னவாகிறது? - இதுவரை நடந்தவை

”நான் லோகேஷின் மிகப்பெரும் ரசிகன். அவரது இன்டர்வியூக்கள் பிடிக்கும். விஜய் சாரின் பிரம்மாண்ட ரிலீசான லியோவை எதிர்பார்த்துள்ளேன். நயன்தாராவின் வீடியோக்களுக்கு லைக் போடுவதைப் போன்று லோகேஷ் கனகராஜின் வீடியோவை பார்த்து மெசேஜை பார்க்காமல் லைக் செய்து விட்டேன்.

தவறு என்னால் ஏற்பட்டது. எனவே உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்களைப் போன்று அக்டோபர் 19 ஆம் தேதி லியோ ரிலீசுக்காக நானும் காத்திருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”எதை விட்டு தள்ளுவது என்பதை அறிவதே கலை” என ரூமியின் தத்துவத்தை பதிவிட்டிருந்தார். விக்னேஷ் சிவனுகாக தான் இந்த பதிவு எனவும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த பதிவுகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leo : விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன் - என்ன காரணம் தெரியுமா?
Nayanthara: திருப்பதியில் காலணி அணிந்தது முதல் குழந்தை பெற்றது வரை- நடிகையின் 5 சர்ச்சைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com