அஜித் பட வாய்ப்பை விக்னேஷ் சிவன் தவறவிட்டது ஏன், AK62 என்னவாகிறது? - இதுவரை நடந்தவை

விக்னேஷ் சிவன் கூறிய கதையின் ஒன்லைன் பிடித்ததாலேயே அஜித் குமாரும் தயாரிப்பு நிறுவனமும் படத்துக்கு ஒப்புகொண்டனர். அதன் பிறகு என்ன நடந்தது ?
Vignesh Shivan : அஜித் பட வாய்ப்பை தவறவிட்டது ஏன்? - AK62 என்னவாகிறது?
Vignesh Shivan : அஜித் பட வாய்ப்பை தவறவிட்டது ஏன்? - AK62 என்னவாகிறது?Twitter

இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்தப்படமான AK 62-வை இயக்குவதாக கடந்த ஆண்டே அறிவிப்புகள் வெளியாகின. இதனை கடந்த மார்ச் 22, 2022-ல் லைகா நிறுவனம் கொடுத்த அறிவிப்பில் உறுதிபடுத்தியது.

அந்த அறிவிப்பில் 2022 இறுதியில் படப்பிடிப்புகள் தொடங்கி 2023 பாதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக லைகா அறிவித்திருந்தது.

படத்திற்கு அனிரூத் இசையமைப்பார் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்ட படி எதுவுமே நடைபெறவில்லை.

இடையில் துணிவு பட வெளியீடும் இருந்ததால் AK62 கவனம் பெறாமலே போனது.

இந்த நிலையில் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகுவதை அவரே உறுதிபடுத்தியுள்ளார். அவரது ட்விட்டர் பயோவில் ஏகே 62 வை இன்று காலை நீக்கிவிட்டார்.

போடா போடி முதல் காத்துவாக்குல ரெண்டு காதல் வரை 5 திரைப்படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், அஜித், விஜய் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களை வைத்து படங்கள் எடுக்க குறைந்த வாய்ப்புகளே இருந்தன.

அதனால் ஏகே 62 அறிவிப்பை மிகவும் உற்சாகமாக பகிர்ந்தார். தனக்கு 2022 சிறந்த ஆண்டு என்று, நயன்தாராவுடன் திருமணம் நடைபெற்றதையும், குழந்தை பிறந்ததையும், அஜித் குமாருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றதையும் மூன்று முக்கிய நிகழ்வுகளாக பதிவிட்டிருந்தார்.

Vignesh Shivan : அஜித் பட வாய்ப்பை தவறவிட்டது ஏன்? - AK62 என்னவாகிறது?
LEO - Bloody Sweet: இது தான் தளபதி படத்தின் புதிய டைட்டில்! வீடியோ வெளியிட்டது படக்குழு

ட்விட்டரில் தனது கவர் புகைப்படமாக அஜித் குமாரின் புகைப்படத்தை வைத்தார். இப்போது அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டு " Never Give Up " என ஊக்கமளிக்கும் மேற்கோள் ஒன்றை வைத்துள்ளார்.

மேலும் ஏகே 62 என்பதை நீக்கிவிட்டு விக்கி 6 எனவும் மாற்றியுள்ளார்.

Vignesh Shivan : அஜித் பட வாய்ப்பை தவறவிட்டது ஏன்? - AK62 என்னவாகிறது?
Ajith Kumar : சைக்கிளிங் முதல் சமையல் வரை - அஜித்துக்கு பிடித்த இந்த விஷயங்கள் தெரியுமா?

விக்னேஷ் சிவன் கூறிய கதையின் ஒன்லைன் பிடித்ததாலேயே அஜித் குமாரும் தயாரிப்பு நிறுவனமும் படத்துக்கு ஒப்புகொண்டனர்.

ஆனால் முழுக்கதையாக அஜித் குமாருக்கு திருப்தி அளிக்காததால் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியிருக்கலாம் என பேசப்படுகிறது.

அஜித் குமாரின் படத்துக்கு பதிலாக அவர் இயக்கப் போகும் படம் என்ன? என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதே வேளையில், ஏகே 62வின் இயக்குநர் மகிழ்திருமேனி என்ற பேச்சும் எழுந்துள்ளது.

Vignesh Shivan : அஜித் பட வாய்ப்பை தவறவிட்டது ஏன்? - AK62 என்னவாகிறது?
அஜித், விக்னேஷ் சிவன், லைகா : மெகா கூட்டணி - அதிகாரபூர்வ அறிவிப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com