“அடுத்த படமும் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தான்” - மாமன்னன் விழாவில் உதயநிதி பேசியது என்ன?

”அடுத்த 3 வருடத்திற்கு படம் கிடையாது. அதற்கு பின்பு தெரியவில்லை. அதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
Maamannan audio launch : Udhayanidhi stalin speaks about next film
Maamannan audio launch : Udhayanidhi stalin speaks about next film Twitter
Published on

மூன்று வருடத்திற்கு சினிமாவில் நடிக்க மாட்டேன், அதற்கு பிறகு மக்கள் எடுக்கும் முடிவு தான் என்றும், மாரி செல்வராஜுக்கு வாக்குறுதி ஒன்றை கொடுத்திருக்கிறேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அந்த விழாவிற்கு கமல்ஹாசன், இசையமைப்பாளார் ஏ. ஆர் ரஹ்மான், விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

"மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன்முறையாக நடிக்கிறேன்.

பெரிய குழுவுடன் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. மாரி செல்வராஜ் படங்களில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்களோ அது இந்தப் படத்திலும் இருக்கிறது. படத்தை ஜூன் 29 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

அடுத்த மூன்று வருடத்திற்கு சினிமாவில் நடிக்க மாட்டேன். கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அமைச்சர் பொறுப்பு கொடுத்த பின்பும் நான் போய் படங்களில் நடித்து வந்தால் அது சரியாக இருக்காது. நிறைய வேலைகள் இருக்கிறது. பணிகள் இருக்கிறது."

Maamannan audio launch : Udhayanidhi stalin speaks about next film
"நல்ல photo போடுங்க பா" கிருத்திகா உதயநிதி நக்கல் ட்வீட்- உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?

"பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையே தான் படத்தின் டப்பிங், இசை வெளியீட்டு விழாவுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறேன். எனக்கு தெரிந்து இதுதான் கடைசி படமாக இருக்கும்.

நானும் மாரி செல்வராஜும் நிறைய பேசினோம். மாரி செல்வராஜின் அரசியல் இந்தப் படத்தில் அதிகமாக இருக்கிறது. அவருக்கும் எனக்குமான புரிதல் அதிகரித்துள்ளது.

அடுத்து நீங்கள் படம் நடித்தால் என் இயக்கத்தில் தான் நடிக்க வேண்டும் என என்னிடம் கூறினார். அடுத்த 3 வருடத்திற்கு படம் கிடையாது. அதற்கு பின்பு தெரியவில்லை. அதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

Maamannan audio launch : Udhayanidhi stalin speaks about next film
"இன்பநிதிக்கு 18 வயசாகிருச்சு" - கிருத்திகா ட்வீட் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com