சூரரைப் போற்று, மண்டேலா - சரி, இந்திய அளவில் தேசிய விருது பெற்ற வேறு படங்கள் என்ன?

சிறந்த நடிகருக்கான தேசிய விருதைச் சூரரைப் போற்று படத்துக்காகச் சூரியா சிவகுமாரும், தன்ஹாஜி படத்துக்காக அஜய் தேவ்கனும் இணைந்து பெறுகின்றனர்.
Soorarai Pottru
Soorarai PottruCanva
Published on

இந்திய அரசு, சினிமா துறையில் பணியாற்றும் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருது தான் தேசிய விருது.

68ஆவது தேசிய விருதுகளுக்கான பரிந்துரைகளை, ஜீரிகள் அணித் தலைவர் ஆனந்த் விஜய் செய்திகள் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம் சமர்ப்பித்தார்.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விபுல் ஷா தலைமையில் 10 பேர் கொண்ட நடுவர் குழு வெள்ளிக்கிழமை காலை அமைச்சரை சந்தித்து தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

தாதா சாகேப் பால்கே விருது ஒருவருக்கு, ஃபீச்சர் படத்துக்கு 28 விருதுகள், ஆவணப் படங்கள் உட்பட நான் ஃபீச்சர் படங்களுக்கு 22 விருதுகள், சிறந்த சினிமா எழுத்துக்கு 1 விருது, சினிமா துறைக்கு சாதகமான சிறந்த மாநிலத்துக்கு ஒரு விருது என பல விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

30 மொழிகளைச் சேர்ந்த 305 படங்கள் ஃபீச்சர் சினிமா பிரிவிலும், 28 மொழிகளைச் சேர்ந்த 148 படங்கள் நான் ஃப்யூசர் பிரிவிலும் பங்கெடுத்தன. 24 புத்தகங்கள் மற்றும் 5 திரை விமர்சனங்கள் சிறந்த சினிமா எழுத்துக்கான போட்டியிலிருந்தன.

Aparna Balamurali
Aparna Balamurali Twitter

சிறந்த நடிகருக்கான தேசிய விருதைச் சூரரைப் போற்று படத்துக்காகச் சூரியா சிவகுமாரும், தன்ஹாஜி படத்துக்காக அஜய் தேவ்கனும் இணைந்து பெறுகின்றனர்.


சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அபர்ணா பாலமுரளி பெற்றுள்ளார். சிறந்த ஃபீச்சர் படத்துக்கான தேசிய விருதை சூரரைப் போற்று வென்றுள்ளது. சூரரைப் போற்று மட்டும் 3 தேசிய விருதுகளை வென்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழர்களுக்குப் பெருமிதமான தருணமிது.


பலரும் எதிர்பார்த்தது போலச் சிறந்த துணை நடிகருக்கான விருதை மலையாள சேட்டன் நடிகர் பிஜு மேனன் ஐயப்பனும் கோஷியும் படத்துக்காக வென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகைக்கான விருதை லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி 'சிவரஞ்ஜினியும் இன்னும் சில பெண்களும்' படத்துக்காக வென்றுள்ளார்.

ஃபீச்சர் படப் பிரிவில் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை ஐயப்பனும் கோஷியும் படத்தின் இயக்குநர் கே ஆர் சச்சிதானந்தன் வென்றுள்ளார். அவர் கடந்த ஜூன் 2020ல் உடல் நலக் குறைபாடு காரணமாக காலமானது வருத்தத்தோடு நினைவுகூரத்தக்கது.

தாதா சாகேப் பால்கே விருது தனியே அறிவிக்கப்படுமென பல்வேறு செய்திகளில் வெளியாகியுள்ளது. தேசிய விருதுகளை வென்ற அனைத்து திரைத் துறை கலைஞர்களுக்கும் நம் வாழ்த்துகள்.

Soorarai Pottru
தேசிய திரைப்பட விருதுகளை குவித்த சூரரைப் போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

ஸ்பெஷல் மென்ஷன் ஃபீச்சர் படமாக செம்கோர் (Semkhor) என்கிற திமாசா மொழிப் படமும், வான்கு என்கிற மலையாள மொழிப் படமும், கொடகாதி என்கிற மராத்தி மொழிப்பாடமும், ஜூன் என்கிற மராத்தி மொழிப் படமும் வென்றுள்ளன.

குடும்ப மதிப்புகளுக்கான சிறந்த நான் எதிர்காலம் படமாக குங்குமார்சன் என்கிற மராத்தி மொழிப்பாடம் வென்றுள்ளது.

சமூகப் பிரச்சனைகளுக்கான சிறந்த நான் ஃபீச்சர் படமாக 'ஜஸ்டிஸ் டிலேட் பட் டெலிவர்ட்' என்கிற இந்தி மொழிப்பாடமும், 'த்ரீ சிஸ்டர்ஸ்' என்கிற வங்க மொழிப் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறந்த நான் ஃபீச்சர் படமாக 'டெஸ்டிமோனி ஆஃப் அனா' என்கிற டாங்கி மொழிப்பாடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Soorarai Pottru
அபர்ணா பாலமுரளி : தேசிய விருது வென்ற நாயகியின் இந்த படங்களைத் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com