அறம் டூ கோலமாவு கோகிலா - பெண்களை மையப்படுத்தி எடுக்கபட்ட நயன்தாராவின் 5 படங்கள் இதோ!

ஹீரோக்கள் இருந்தால் தான் படம் ஓடும் என்ற பிம்பத்தை உடைத்தது பல கதாநாயகிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் நயன்தாரா.
Nayanthara
NayantharaTwitter

முன்பெல்லாம் திரைத்துறையில் ஹீரோக்களையே மாஸாக காண்பிப்பார்கள். சம்பளமும் ஹீரோக்களுக்கு தான் அதிக கொடுக்கப்படும். படிபடியாக அந்த நிலை மாற ஆரம்பித்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து முழு படத்தையும் அவர்களே நகர்த்தி செல்லும் படியான படங்கள் வந்துக் கொண்டு இருக்கிறது.

ஹீரோக்கள் இருந்தால் தான் படம் ஓடும் என்ற பிம்பத்தை உடைத்தது பல கதாநாயகிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் நயன்தாரா.

வலுவான பெண்களை மையப்படுத்தி நிறைய படங்கள் வருகிறது. அதில் பெண்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் தந்த நயன்தாராவின் 5 படங்களை பார்க்கலாம்.

அறம்

2017ஆம் ஆண்டு ந. கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் அறம். நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்த இப்படம் மக்கள் எதிர்நோக்குகிற பிரச்னைகள், ஏழ்மையை வைத்து மெல்ல ஆரம்பிக்கிறது .

கிராமத்தில் தோண்டப்பட்டிருக்கும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை விழுந்துவிட, குழந்தையை மீட்கும் அந்தத் தருணங்கள், அதில் நயன்தாரா காட்டும் இயல்பான, உணர்வுப்பூர்வமான நடிப்பு நம்மை பரபரப்பின் உச்சிக்கே இட்டுச் செல்கிறது. அறம் நயன்தாராவின் சினிமா கெரியரில் ஒரு பெயர் சொல்லும் படம்.

o2

நயன்தாரா நடிப்பில் ஓடிடி யில் நேரடியாக ரிலீசான படம் ஓ2. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் ஒரளவு மட்டுமே வரவேற்பை பெற்றிருந்தது.

சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்ட மகனை காப்பாற்றும் ஒரு தாயாக அவர் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திருந்தார்.

ஐரா

இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான த்ரில்லர் திரைப்படம் ஐரா. இத்திரைப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களிலும், கலையரசன், யோகி பாபு, ஜெயப்ரகாஷ் நடித்துள்ளார்.

முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்த நயன்தாரா படத்தை தாங்கி பிடித்து எடுத்துசென்றிருந்தார். கதை களம் பெரியளவில் பேசப்படாவிட்டாலும் நயன்தாரா நடிப்புக்கு ரசிகர்கள் விழுந்தனர்

Nayanthara
நயன்தாரா : தமிழ் பெயர் இதுதான் - வைரலாகும் 7 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவு

கோலமாவு கோகிலா

ஒரு மாஸ் ஹீரோவிற்கு எத்தனை மாஸ் வருமோ, அந்த அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் ஒரு மாஸ் பேன் பாலோயிங் உள்ளது. அதற்கு காரணம் அவரின் நடிப்பு மற்றும் கதை தேர்வு

கோலமாவு கோகிலாவில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன்வசப்படுத்தியிருப்பார் நயன்தாரா. நயன்தாரா நடித்த ஹீரோயின் செண்டிரிக் படங்களில் கோலமாவு கோகிலா அவரின் திரைபயணத்தில் முக்கியமான படம் என்றே கூறலாம்.

நெற்றிக்கண்

மிலிண்ட் ராவ் இயக்கத்தில், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரில்லர் படம் நெற்றிக்கண்.

அதிரடி மற்றும் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் நயன்தாரா கண்பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்தார். படம் முழுவதையும் தனது நடிப்பின் மூலம் மட்டும் ரசிகர்களை என்கேஜ் செய்து வைத்திருந்தார்.

Nayanthara
நயன்தாரா-விக்னேஷ் சிவன்: 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணமா? ஆதாரங்களை சமர்பித்த தம்பதி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com