Netflix Subscriber -ஆ நீங்கள்? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது

Netflix சமீபத்தில் 200,000 சந்தாதாரர்களை இழந்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இதனால், அந்நிறுவனம் மலிவான சந்த திட்டத்தை வெளியிடும் எனக் கூறப்படுகிறது. இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில், இந்த மூன்று விஷயங்களைச் செய்வதிலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும்.
Netflix
NetflixCanva
Published on

Netflix நிறுவனம், தங்களின் விதிமுறைகளை மீறுகிற வாடிக்கையாளரிடத்தில் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளாத கறார்த்தன்மை கொண்டதாகும் ஒருவேளை நீங்கள் அவ்வாறு நடந்துகொள்ளும் பட்சத்தில் தயவே இல்லாமல் உங்கள் கணக்கைப் பயன்படுத்தும் உரிமையிலிருந்து தடை செய்யப்படுவீர்கள்.

பயனாளர்கள் தங்கள் கணக்கின் கடவுச்சொற்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தினை நெட்ஃபிக்ஸ் அதை வெறுக்கிறது. ஆனால், இதைத் தாண்டி நெட்ஃபிக்ஸ் பயனர்களை தங்களுடைய தளத்திலிருந்து தடைசெய்வதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

Netflix சமீபத்தில் 200,000 சந்தாதாரர்களை இழந்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இதனால், அந்நிறுவனம் புதிய சந்தா திட்டங்களை விளம்பரங்களுடன் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள சந்தா திட்டங்களை விட மலிவானதாக இருக்கும், என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில், இந்த மூன்று விஷயங்களைச் செய்வதிலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும்.

VPN
VPNCanva

1. VPN பயன்படுத்துபவர்கள் :

VPN என்பதை அறியாதவர்கள் பெரும்பாலும் யாரும் இருக்க வாய்ப்பில்லை. ஆன்லைன் செயல்பாடுகளை ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க விரும்புபவர்கள் யாவரும் இந்த விபிஎன் வசதியைப் பயன்படுத்துகிறார்கள். இது உங்கள் நெட்வொர்க்கை சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளப் பயன்படுகிறது. மேலும், உங்கள் ஐபி முகவரி, தேடல்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் ஆகியவற்றை எந்த நெட்வொர்க்கை பயன்படுத்தும் போது மறைத்துக் கொள்ள முடியும். இது தனிப்பட்ட உரிமை சார்ந்தது என்றாலும், தன்னுடைய பயனர்கள் VPN பயன்படுத்துவதை Netflix விரும்பவில்லை.

ஏனென்றால் VPN-கள், நீங்கள் வேறு நாட்டில் இருக்கிறீர்கள் என்று தளங்களை நம்பச்செய்து ஏமாற்றுகின்றன. அதாவது, உங்கள் நாட்டில் பார்ப்பதற்குக் கிடைக்காத டிவி நிகழ்ச்சிகளை நீங்கள் பார்க்க முடியும். இது Netflix விதிமுறைகளுக்கு எதிரான செயலாகும்.

நீங்கள் விபிஎன் மூலமாக நெட்பிளிக்ஸை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், உங்களுக்கு சில நினைவூட்டல் மெசேஜ்களை நெட்பிளிக்ஸ் அனுப்பும். ஒருவேளை நீங்கள் அதனைப் புறக்கணிக்கும் பட்சத்தில் உங்களை நிரந்தரமாகத் தடை செய்யும்.

Netflix
NetflixTwitter

2. Netflix -ன் அசல் தயாரிப்பைக் காப்பி அடிப்பது :

இது எந்த ஒரு செயலிக்கும், இணையதளத்திற்கும் பொதுவான ஒன்றேயாகும். நெட்பிளிக்ஸுக்கு சொந்தமான அசல் படைப்பை நீங்கள் திருடவோ அல்லது மீண்டும் உருவாக்கவோ முடியாது. நெட்ஃபிக்ஸ் ஸ்ட்ரீமிங் நிறுவனங்களின் படைப்புகளைக் காப்பி அடிக்கும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறது.

Netflix
Squid Game : “ஸ்க்விட் கேம்” வெற்றியடைய காரணம் என்ன? - விரிவான அலசல்

"தங்களுடைய தளத்தில் உள்ள படைப்புகளின் உள்ளடக்கத்தை காப்பகப்படுத்தவோ, அதே போல மீண்டும் உருவாக்கம் செய்யவோ, விநியோகிக்கவோ, காட்சிப்படுத்தவோ, வெளியிடவோ வேண்டாம்" என்று நெட்பிளிக்ஸ் பயனர்களிடம் கூறுகிறது. இந்த அறிவுறுத்தல்களை மீறுவோருக்கு, எங்கள் சேவையை நிறுத்தலாம் அல்லது கட்டுப்படுத்தலாம். இந்த பயன்பாட்டு விதிமுறைகள் யாவும் எங்கள் சேவையினை சட்டவிரோதமாகவும், மோசடியாகவும் பயன்படுத்துவோருக்கே பொருந்தும்.” என்று நிறுவனம் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Netflix
Netflix : எல்லாம் தோல்வி, Amazon, Hotstar -உடன் மோத முடியாமல் திணறல் - என்ன காரணம்?
கடவுச்சொல்
கடவுச்சொல் Canva

3. கடவுச்சொல் பகிர்தல் :

நெட்ஃபிளிக்ஸ் நீண்ட காலமாகக் கடவுச்சொல் பகிர்வு சிக்கலை எதிர்த்துப் போராடி வருகிறது. இதற்கு முன்பு இந்த விசயத்தில் நெட்பிளிக்ஸ் இந்தளவிற்குக் கட்டுப்பாட்டுடன் இல்லை. ஆனால், இப்போது அது நடைமுறையைக் கட்டுப்படுத்த விரும்புகிறது. உண்மையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே பெரு, சிலி மற்றும் கோஸ்டாரிகா போன்ற நாடுகளில் இந்த கடவுச்சொல் பகிர்வைத் தடுக்க ஒரு மாபெரும் சோதனையை நடத்தியது.

Netflix
Netflix : 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்ஃபிளிக்ஸ் - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com