Ranjithame: "காபி இல்ல Tribute தான்!" விமர்சனங்களுக்கு விளக்கமளித்த Lyricist விவேக்

ரஞ்சிதமே பாடலின் இசை, உளவாளி திரைப்படத்தில் இடம்பெற்ற 'மொச்சகொட்ட பல்லழகி' பாடலின் இசையை போலவே இருப்பதாகவும், அந்த பாடலின் காபி எனவும் கூறப்பட்டது.
Ranjithame
RanjithameYoutube
Published on

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் 'ரஞ்சிதமே' பாடல் வெளியானது. இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தன்னா நடிப்பில் வெளியாகவிருக்கிறது வாரிசு. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைப் செய்ய வைத்துக்கொண்டிருக்கிறது இந்த பாடல்.

பாடலாசிரியர் விவேக் ரஞ்சிதமே பாடலை எழுதியிருக்கிறார். தமன் இசையமைத்துள்ளார்.

ரஞ்சிதமே பாடலின் இசை, உளவாளி திரைப்படத்தில் இடம்பெற்ற 'மொச்சகொட்ட பல்லழகி' பாடலின் இசையை போலவே இருப்பதாகவும், அந்த பாடலின் காபி எனவும் கூறப்பட்டது. மேலும், இணையத்தில் டிரால்களும் எழுந்தன. இதனையடுத்து, ஒரு நேர்காணலுக்கு பேட்டி அளித்த பாடலாசிரியர் விவேக், இதற்கான விளக்கத்தை அளித்திருந்தார்.

அதில், தான் கிராமிய சாயலில் நடிகர் விஜய்க்கு பாடல் எழுதவேண்டும் என்று தனக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்ததாகவும், இசையமைப்பாளருக்கும் இது பிடித்திருந்ததாகவும் தெரிவித்தார் விவேக். கிராமிய பாடல்கள், அதாவது Folk எனப்படும் நாட்டுபுற சந்தத்தில் இதற்கு முன்னர் நிறைய பாடல்கள் வெளிவந்துள்ளது என குறிப்பிட்டார்.

Ranjithame
வாரிசு : திரையரங்கம் அல்லாத உரிமைகள் 150 கோடிக்கு விற்பனை?

மொச்சக்கொட்ட பல்லழகி, தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு செய்ய சொன்னேன், தர்மதுரை படத்தில் இடம்பெற்ற மக்க கலங்குதப்பா, சிலம்பாட்டம் படத்தில் வந்த இன்னாமா பண்ணலா டிஸ்கோவுக்கு போகலா உள்ளிட்ட பாடல்களை அவர் மேற்கோள் காட்டினார்.

மேலும், ரஞ்சிதமே பாடல் தொடங்கும் வரியான 'கட்டுமல்லி கட்டி வச்சா' வேறு ஒரு டியூனில் தொடங்கி தான் இந்த பாடலுக்குள் நுழைகிறது எனவும் பாடலாசிரியர் விவேக் கூறினார். "இதை back track பண்ணி, tribute ஆக கொடுக்க நினைத்தபோது மொச்சகொட்ட பல்லழகி கிடைத்தது. நாட்டுபுற இசை என்பதால், இதற்கு முன்னும் இதுபோல பாடல்கள் வந்திருக்கலாம்" என்றார்.

மேலும், வாரிசு படத்தின் வசனகர்த்தாவாகவும் விவேக் பணியாற்றியிருப்பதால், 'மொச்சகொட்ட பல்லழகி' பாடலில் தொடங்கி, மெல்ல ரஞ்சிதமே பாடலாக மாறுவது போல தான் காட்சியமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

அந்த பாடலுக்கு கொடுக்கப்படவேண்டிய கிரெடிட்டை முறையாக படத்தில் கொடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ரஞ்சிதமே பாடலை நடிகர் விஜய் மற்றும் பின்னணி பாடகி மானசி பாடியுள்ளனர்.

உளவாளி படத்திற்கு இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Ranjithame
வாரிசு : தீபாவளிக்கு முதல் பாடல் ரிலீஸ் - உறுதிபடுத்திய இசையமைப்பாளர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com