வாரிசு : தீபாவளிக்கு முதல் பாடல் ரிலீஸ் - உறுதிபடுத்திய இசையமைப்பாளர்!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் தெலுங்கு ஆடியோ லான்ஞ்சில் பேசிய தமன் தீபாவளிக்கு வாரிசு படத்தின் பாடல் வெளியாவது குறித்துப் பேசினார்.
வாரிசு : தீபாவளிக்கு முதல் பாடல் ரிலீஸ் - உறுதிபடுத்திய இசையமைப்பாளர்!
வாரிசு : தீபாவளிக்கு முதல் பாடல் ரிலீஸ் - உறுதிபடுத்திய இசையமைப்பாளர்!Twitter
Published on

விஜய் நடிப்பில் பொங்கல் விடுமுறையில் வாரிசு திரைப்படம் வெளியாவது உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் வரும் 24ம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என்ற தகவல் பரவிவருகிறது.

தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் சென்டிமன்ட், காதல் நிறைந்த குடும்பப்படமாக உருவாகியிருக்கிறது வாரிசு.

இந்தப் படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சென்னை எண்ணூரில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இன்று இயக்குநரும் நடிகருமான மனோபாலா படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை சந்தித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் தமனின் நீண்டகால ஆசையான தளபதி விஜய் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு இந்த படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது.

சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தீபாவளிக்கு அவர் காத்திருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதனால் தீபாவளிக்கு வாரிசு படத்தின் பாடல் வெளியாகும் என ரசிகர்கள் கணித்து வந்தனர்.

வாரிசு : தீபாவளிக்கு முதல் பாடல் ரிலீஸ் - உறுதிபடுத்திய இசையமைப்பாளர்!
வாரிசு : திரையரங்கம் அல்லாத உரிமைகள் 150 கோடிக்கு விற்பனை?

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் தெலுங்கு ஆடியோ லான்ஞ்சில் பேசிய தமன் தீபாவளிக்கு வாரிசு படத்தின் பாடல் வெளியாவது குறித்துப் பேசினார்.

முதலில் வெளியாகும் பாடல் விஜய் பாடிய பாட்டாக இருக்கலாம் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

விஷால், ஆர்யா நடித்த எனிமி படத்தில் மால டும் டும் பாடல் தமனுக்கு தமிழில் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கும் அவர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரிசு : தீபாவளிக்கு முதல் பாடல் ரிலீஸ் - உறுதிபடுத்திய இசையமைப்பாளர்!
வாரிசு vs துணிவு பொங்கலுக்கு உறுதி: இதுவரை மோதிக்கொண்ட விஜய், அஜித் படங்கள்- வென்றது யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com