பொன்னியின் செல்வனா? பாகுபலியா? டிவிட்டரில் அனல் பறக்கும் ஃபேன் வார்

படம் துவங்கியதிலிருந்தே பாகுபலியோடு ஒப்பிட்டு வருவதால் இந்த போட்டி தற்போது இன்னும் வலுவடைந்துள்ளது.
பொன்னியின் செல்வனா? பாகுபலியா?
பொன்னியின் செல்வனா? பாகுபலியா? twitter
Published on

மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.  படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவும் வரலாற்று திரைப்படங்களும்:

தமிழ் சினிமாவில், பார்த்திபன் கனவு, மாயாபஜார் போன்ற வரலாற்று திரைப்படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலம். கருப்பு வெள்ளை நிற படம் காலத்தில், வரலாற்று திரைப்படங்கள் அதிகம் வெளியாகின. கலர் திரைப்படங்கள் வர துவங்கியதில் அது சற்றே குறைய ஆரம்பித்தது.

கர்ணன், ராஜ ராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை தான் வரலாற்று திரைப்படமாக அல்லது பீரியட் ஃபிலிம் என்ற பட்டியலில் நாம் வைக்க இயலும். பல வருடங்கள் கழித்து பொன்னர் சங்கர், 23ஆம் புலிகேசி போன்ற படங்கள் வந்தாலும், சமீப காலங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு தான் இந்த ஜானரில் படங்கள் வந்துள்ளன. 

பாகுபலி vs பொன்னியின் செல்வன்:

அந்த வகையில் பெரும் வரவேற்பபை பெற்றிருந்தது தெலுங்கு திரைப்படமான பாகுபலி. இரு பாகங்கள், கிட்ட தட்ட ஐந்து வருடங்களாக உருவானது இந்த படம். தமிழில் இப்படி நம் காலரை தூக்கி விட்டுக் கொள்ளும்படி ஒரு வரலாற்று திரைப்படம் வந்துவிடாதா என்ற ஏக்கத்திற்கு மருந்தாக வந்தது பொன்னியின் செல்வன். நடிகர்கள் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இன்று வெளியாகி நல்ல வரவேற்பை படம் பெற்று வரும் நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தோடு, எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படங்களை ஒப்பிட்டு டிவிட்டரில் ஃபேன் வார் நடந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் புரோமோஷன், செய்தியாளர் சந்திப்புகளிலும் பாகுபலியை முன்வைத்தே பொன்னியின் செல்வன் பார்க்கப்பட்டது. படம் துவங்கியதிலிருந்தே பாகுபலியோடு ஒப்பிட்டு வருவதால் இந்தபோட்டி தற்போது இன்னும் வலுவடைந்துள்ளது. 

பாகுபலியில் பொன்னியின் செல்வனின் சாயல்: 

இன்று தமிழ் தெலுங்கு திரை ரசிகர்கள் பொன்னியின் செல்வனை பாகுபலியோடு ஒப்பிட்டு டிவிட்டரில் ஃபேன் வார்கள் நடக்கிறது. ஆனால், பாகுபலியில் இடம்பெற்ற நிறைய காட்சிகள் பொன்னியின் செல்வன் நாவலின் சாயலாக தான் தோன்றுகின்றன. 

1.அருள்மொழி வர்மன் பொன்னி நதியில் விழுந்த போது, ஊமைராணி காப்பாற்றி கொடுத்தாள். அவளது கைகள் மட்டுமே குழந்தையைப் பிடித்த வண்ணம் தண்ணீருக்கு மேல் தெரியும். அமரேந்திர பாகுபலியின் இன்ட்ரோ இது தான்!

2.மஹேந்திர பாகுபலி யானை பிரியன் - அருள்மொழி வர்மனைப்போல

3.சிறிய பழுவேட்டரையரின் சாயல்  கட்டப்பாவின் கதாபாத்திரங்களில் தென்படும். 

பொன்னியின் செல்வனா? பாகுபலியா?
பொன்னியின் செல்வன்: "ஐஸ்வர்யா ராயை பார்த்தால் பொறாமையாக உள்ளது" - நடிகை மீனா ட்வீட்

பொன்னியின் செல்வன் பாகுபலி அல்ல என்பதை உரக்கச் சொல்லும் விதமாக இயக்குநர் மணிரத்னம், "பாகுபலி முற்றிலுமாக புனைந்த கதை...ஆனால் இது அப்படி அல்ல" என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பொன்னியின் செல்வனா? பாகுபலியா?
Ponniyin Selvan : படம் வெளியாகும் முன் இணையத்தை ஆக்கிரமித்த பொன்னியின் செல்வன் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com