பிரேம் குமார்: 12 வயதில் வேலைக்கு சென்ற சிறுவன் - சினிமா ஆசையால் கோடீஸ்வரரானது எப்படி?

2016ம் ஆண்டு பிரேம் குமாருக்கு 18 வயது இருக்கும்போது தனது முதல் படத்தை தயாரித்துள்ளார். எந்த அனுபவமும் இல்லாமல் சினிமாவுக்காக கண்மூடித்தனமாக செலவு செய்ய அப்போது தயாராக இருந்திருக்கிறார்.
பிரேம் குமார்: 12 வயதில் வேலைக்கு சென்ற சிறுவன் - சினிமா ஆசையால் கோடீஸ்வரரானது எப்படி?
பிரேம் குமார்: 12 வயதில் வேலைக்கு சென்ற சிறுவன் - சினிமா ஆசையால் கோடீஸ்வரரானது எப்படி?Twitter

ஒருவர் பணக்காரராக ஆகவோ, ஏதேனும் ஒன்றை சாதிக்கவோ மிகப் பெரிய உந்துவிசையாக இருப்பது ஆசை தான்.

ஆசை இருக்கும் போதுதான் புதிய விஷயங்களை மனிதரிகள் முயற்சிக்கின்றனர் எனலாம். அப்படி சினிமா மீது இருந்த ஆசை தான் பிரேம் குமாரை இன்று மிகப் பெரிய பணக்காரராக உயர்த்தியிருக்கிறது.

அவருக்கு டீன் ஏஜ் கூட இல்லாத காலத்தில் அதாவது 8ம் வகுப்பு படிக்கும் போதே சினிமா மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்.

ஒரு திரைப்படத்தின் காட்சிகள் நகர்வது, கேமராவின் செயல்பாடுகள், எடிட் செய்யப்படுவது என அணுஅணுவாக சினிமாவை ரசித்திருக்கிறார்.

மற்றொரு பக்கம் அவரது குடும்ப வறுமைக் காரணமாக வேலைக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறார். படிப்பையும் கைவிட்டுவிடவில்லை.

2016ம் ஆண்டு பிரேம் குமாருக்கு 18 வயது இருக்கும்போது தனது முதல் படத்தை தயாரித்துள்ளார். எந்த அனுபவமும் இல்லாமல் சினிமாவுக்காக கண்மூடித்தனமாக செலவு செய்ய அப்போது தயாராக இருந்திருக்கிறார்.

குஜராத்தி மொழியில் உருவான அந்த படத்தின் பெயர் Koi Aane Parnavo. ஹிராபாய் மனியா என்பவரால் இயக்கப்பட்டிருக்கிறது.

ஜீல் ஜோஷி, கல்பேஷ் ராஜ்கோர், அஞ்சலி மற்றும் அபய் சந்தரனா ஆகியோர் நடித்த அந்த படம் அக்டோபர் 14, 2016ல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

பருபாய் என்பவன் தனக்கான மணமகளைத் தேடும் எளிமையான கதையுடன் வந்த அந்த படம் வெற்றிபெறவில்லை. ஆனால் அதன் மூல பிரேம் குமார் தனது கனவை முழுமையாக புரிந்துகொண்டார்.

இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்து படித்த பிரேம் குமார் தனக்கு நிலையான வருமானம் தேவை என்பதைப் புரிந்துகொண்டார்.

அதற்காக யாரிடமும் கைகெட்டி நிற்காமல் சொந்தமாக ஆராதனா என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அவரது நண்பர்கள், குடும்பத்திடம் இருந்து எந்த உதவியும் பெறாமல், சொந்த தொழில் தொடங்கினார்.

பிரேம் குமார்: 12 வயதில் வேலைக்கு சென்ற சிறுவன் - சினிமா ஆசையால் கோடீஸ்வரரானது எப்படி?
Sanjay Agarwal: 8ம் வகுப்பு ஃபெயிலான நபர் 10,000 கோடிக்கு அதிபதியானது எப்படி?

ஆராதனா ஃபேஷன், ஆராதனா க்ளோ சைன், ஆராதனா பிசியோதெரபிஸ்ட் மற்றும் ஆராதனா ஜாரி ஆகிய பிராண்டுகளை நடத்தி வருகிறார்.

இந்தியா டுடே தளம் கூறுவதன் படி, அவரது ஃபேஷன் நிறுவனம் ஆண்டுக்கு 50 கோடி வரை லாபம் கொடுக்கும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. 2022ம் ஆண்டு அங்கே 450க்கும் மேற்பட்டோர் பணியாற்றியிருக்கின்றனர்.

பிரேம் குமார்: 12 வயதில் வேலைக்கு சென்ற சிறுவன் - சினிமா ஆசையால் கோடீஸ்வரரானது எப்படி?
18 வயதில் MBBS, 22-ல் IAS அதிகாரி, இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலதிபர்- யார் இவர்?

"என் குடும்பத்தின் மீது நான் வைத்த அன்பும், அவர்களை நிதிச் சிக்கலில் இருந்து மீட்க வேண்டும் என்ற உறுதியும் தான் என்னை வழிநடத்தியது.

என் குடும்பம் அளிக்கும் ஊக்கம் தான் நான் தொடர்ந்து முன்னேற காரணம். வெற்றி என்பது இன்னும் வெகுதூரத்தில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். மைல்ஸ் டு வாக். இன்னும் நிறைய தொழில்துறைகளை ஆராய விரும்புகிறேன்" என இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் பிரேம் குமார் கூறியுள்ளார்.

பிரேம் குமார்: 12 வயதில் வேலைக்கு சென்ற சிறுவன் - சினிமா ஆசையால் கோடீஸ்வரரானது எப்படி?
பாகிஸ்தான்: ஒரு உச்சி மாநாடும், அடுத்தடுத்து தலைவர்களின் மரணங்களும் - உலகை உலுக்கிய கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com