Avengers: Iron Man சாகவில்லையா? என்ன சொல்கிறார் Marvel தலைவர்?

இறந்ததாக கூறப்படும் அயர்ன் மேன் பாத்திரம் அடுத்து வெளியாகவிருக்கும் அவஞ்சர்ஸ்: தி காங் டைனாஸ்ட்டி திரைப்படத்தில் மீண்டும் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Avengers: Iron Man சாகவில்லையா? என்ன சொல்கிறார் Marvel தலைவர்?
Avengers: Iron Man சாகவில்லையா? என்ன சொல்கிறார் Marvel தலைவர்? instagram
Published on

பிரபல கற்பனை கதாபாத்திரமான அயர்ன் மேன் மார்வெல் யுனிவெர்ஸின் அடுத்த படத்தில் உயிருடன் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட்டில் மிகப் பிரபலமாக இருக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ். இதனை எம் சி யூ என்று அழைக்கின்றனர்.

ஸ்பைடர்மேன், அயர்ன் மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, தார், பிளாக் விடோ என எம் சி யுவின் கதாபாத்திரங்கள் ஏராளம். இவற்றையெல்லாம் உருவாக்கியவர் ஸ்டான் லீ என்ற எழுத்தாளர். இவர் ஹாலிவுட்டின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர், காமிக் புத்தக எழுத்தாளருமாவார்.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கதாபாத்திரங்களை தனது கதைகள் மூலம் உருவாக்கினார் ஸ்டான் லீ. அவரது நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு இடங்களிலும் குழந்தைகள் மிகவும் விரும்பி படித்த கார்ட்டூன் கதை புத்தமாக திகழ்ந்தது மார்வெல் காமிக்ஸ்.

தொடர்ந்து இவற்றை அனிமேஷன் படங்களாகவும், மனிதர்களை வைத்தும் படங்கள் தயாரிக்க தொடங்கியது ஹாலிவுட். 2008ல் அயர்ன் மேன் திரைப்படம் முதல் 2022ஆம் ஆண்டு கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி திரைப்படம் வரை வந்துள்ளன.

இந்த படங்களை பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வரிசை இருக்கிறது. மாற்றி மாற்றி பார்த்தால் கன்ஃப்யூஸ் ஆகிவிடுவோம்.

அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக படங்களும், இவற்றை எல்லாம் ஒன்றிணையும் விதமாக அவெஞெர்ஸ் என்ற மல்டி ஸ்டாரர் படங்களும் வந்தன.

உலகளவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளது இந்த எம் சி யு

Avengers: Iron Man சாகவில்லையா? என்ன சொல்கிறார் Marvel தலைவர்?
Black Panther: Wakanda Forever படத்துக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் தொடர்பு என்ன?

இந்த எம் சி யூவில் மிகவும் விரும்பப்படும் இரண்டு கதாபாத்திரங்கள் - ஒன்று பிளாக் பாந்தர், மற்றொன்று அயர்ன்மேன்.

பிளாக் பாந்தர் கதாபாத்திரத்தில் நடித்தவர் சாட்விக் போஸ்மேன். இவர் புற்றுநோய் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்திருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான அவஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தில் அயர் மேன் கதாபாத்திரம் இறந்துவிடுவது போல காட்சிப்படுத்தப்பட்டது.

அயர்ன் மேன், தனது சொந்த உழைப்பில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் ஹீரோவாக உருவெடுத்திருப்பார். இவரது கதாபாத்திரத்திற்காகவே பல ரசிகர்கள் மார்வெல் படத்தை பார்க்க தொடங்கினர். அயர்ன் மேன் இறந்துவிட்டதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தனர்.

இதன் பிறகு வெளியான திரைப்படங்களும், அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை.

Avengers: Iron Man சாகவில்லையா? என்ன சொல்கிறார் Marvel தலைவர்?
Marvel: வேலை செய்வதற்கு மோசமான இடம் இது தான் - மார்வெல்லை குற்றம் சாட்டும் VFX கலைஞர்கள்

இந்நிலையில், இறந்ததாக கூறப்படும் அயர்ன் மேன் பாத்திரம் அடுத்து வெளியாகவிருக்கும் அவஞ்சர்ஸ்: தி காங் டைனாஸ்ட்டி திரைப்படத்தில் மீண்டும் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 2025ல் வெளியாகவுள்ள இந்த படத்தின் புதிய போஸ்டரில் அயர்ன்மேன் நின்றிருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்த போஸ்டர் ஃபேன் மேட் என்று கூறப்பட்டு வரும் நிலையில், படக்குழு இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை

Avengers: Iron Man சாகவில்லையா? என்ன சொல்கிறார் Marvel தலைவர்?
Black Panther: 1625ஆம் ஆண்டில் உருவான ஒரு பெண்கள் படை, நடுங்கிய அரசுகள்- திக்திக் வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com