Robo Shankar : ஹன்சிகா குறித்து சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கேட்ட படக்குழு - என்ன பேசினார்?

ஹான்சிகா ஒரு மெழுகு பொம்மை . மைதா மாவை பிணைந்து சுவற்றில் அடித்தால் அது போய் ஒட்டிக்கொள்ளும். அந்த மாதிரி தான் அவர். படத்தில் ஒரு காட்சி, அவருடைய காலை நான் தடவ வேண்டும்...
Robo Shankar : ஹன்சிகா குறித்து ஆபாச பேச்சு; மன்னிப்பு கேட்ட படக்குழு - என்ன பேசினார்?
Robo Shankar : ஹன்சிகா குறித்து ஆபாச பேச்சு; மன்னிப்பு கேட்ட படக்குழு - என்ன பேசினார்?Twitter

ஆதியின் நடிப்பில் உருவாகி வெளியாக உள்ள திரைப்படம் ‘பாட்னர்’. இந்த படத்தை ‘டோரா’ படத்தின் இணை இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடித்துள்ளார். நடிகை ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவிமரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் ஹன்சிகா, ஆதி, ரோபோ சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.அப்போது ரோபோ சங்கர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

ரோபோ சங்கர் பேசியதாவது,

பார்ட்னர் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற, இங்குள்ள அனைவரும் உதவ வேண்டும். நான் என்னடா முதலில் வந்து பேசுகிறேன் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.

விமான நிலையத்திலிருந்து எனக்கு ஒரு போன் வந்தது. வெளியே என்னுடைய டிரைவர் காத்திருக்கிறார். எனக்கு விமானம் இருப்பதால் நான் விரைந்து செல்ல வேண்டும், அதனால் தான் முதலில் பேச வந்தேன். படத்தில் முத்தக் காட்சியை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். பார்த்தால் கண்டிப்பாக நீங்கள் ரசிப்பீங்க.

அதே மாதிரி, ஹான்சிகா ஒரு மெழுகு பொம்மை . மைதா மாவை பிணைந்து சுவற்றில் அடித்தால் அது போய் ஒட்டிக்கொள்ளும். அந்த மாதிரி தான் அவர். படத்தில் ஒரு காட்சி, அவருடைய காலை நான் தடவ வேண்டும்.

“அதாவது முட்டிக்கு கீழே பொருளை தேடி காலை தடவ வேண்டும் . அப்படி ஒரு காட்சி. முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க. நானும் இயக்குனரும் எவ்வளவோ கெஞ்சினோம். ஆனால் தடவ விடமாட்டேன் என்று சொல்லிவிட்டாங்க. கட்டை விரலையாவது தடவிக்கிறேன் என்று கேட்டேன். முடியவே முடியாது ஒன்லி ஹீரோ ஆதி மட்டும் தான் என்னை டச் பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க.

அப்போ தான் நெனச்சேன், ‘ஹீரோ ஹீரோ தான், காமெடியன் காமெடியன் தான்..’ என்று. காமெடியன் கொஞ்சம் ஓரமாத் தான் இருக்க வேண்டும்,’’என்று பேசிவிட்டு ரோபோ சங்கர் அங்கிருந்து புறப்பட்டார்.

Robo Shankar : ஹன்சிகா குறித்து ஆபாச பேச்சு; மன்னிப்பு கேட்ட படக்குழு - என்ன பேசினார்?
Sanjay Dutt : மதுபான பிராண்டை தொடங்கிய லியோ பட நடிகர் - விலை எவ்வளவு தெரியுமா?

அதன் பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர், திரைப்பட குழுவினர் முன்பு ரோபே சங்கரை கடுமையாக சாடினார்.

‘‘ரோபோ சங்கர் இருக்கும் போது கேட்டிருக்க வேண்டும், அவர் போய்விட்டார். மேடையில் சபை நாகரீகம் முக்கியம். அது தெரியவில்லை என்றால் கேவலம், அவர் நடிக்கவே லாயக்கு இல்லாதவர் என்று அர்த்தம். அப்படி பட்ட ஆட்களை மேடையில் ஏற்றாதீர்கள். மேடையில் ஒரே ஒரு பெண்மணியாக ஹன்சிகா மட்டும் தான் இருக்காங்க. ரோபோ சங்கர் எல்லை மீறி பேசியிருக்கார். ஹன்சிகா காலை தொட்டு பார்க்க வேண்டும் என்றும் பேசுவது, சுவற்றுக்குள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். சபையில் பேசுவது சரியா? பிறகு ஏன் சோஷியல் மீடியாவில் நடிகையை பற்றி தவறாக பேசமாட்டார்கள்? அதற்கு வழிவகுப்பதே இந்த மாதிரி நடிகர்கள் தான். இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட நடிகர்களை ஏற்றாதீர்கள். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்,’’ என்று அந்த செய்தியாளர் பேசி முடித்தார்.

அதன்பின்னர் படக்குழு, ரோபோ சங்கர் பேசியதற்கு மன்னிப்பு கேட்டனர்.

Robo Shankar : ஹன்சிகா குறித்து ஆபாச பேச்சு; மன்னிப்பு கேட்ட படக்குழு - என்ன பேசினார்?
மாமன்னன் : ட்விட்டரில் பாசிட்டிவ் விமர்சனம் பதிவிடுவதற்கு Paytmல் ரூ.200 கிரெடிட் ஆகிறதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com