பொன்னியின் செல்வன் : "இந்த படத்துக்கு ஓடிடி தான் சரி" - ராஜமௌலி கருத்து

பொன்னியின் செல்வன் தமிழ்த் திரையுலகின் நீண்டகால கனவுப் படம் என்பதால் அறிவிப்பு வந்ததிலிருந்தே திரைப்படம் பேச்சு பொருளாக இருக்கிறது. பல பிரபலங்களும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ss rajamouli
ss rajamouliTwitter
Published on

பொன்னியின் செல்வன் நாவல் பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு படமாகியிருக்கிறது.

செப்டம்பர் மாத இறுதியில் படம் வெளியாக இருக்கும் நிலையில் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

மணிரத்னம் இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

ss rajamouli
Ponniyin Selvan : பொன்னி நதி பாடல் குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்ஸ் - ஒரு அடடா தகவல்

பொன்னியின் செல்வன் தமிழ்த் திரையுலகின் நீண்டகால கனவுப் படம் என்பதால் அறிவிப்பு வந்ததிலிருந்தே திரைப்படம் பேச்சு பொருளாக இருக்கிறது. பல பிரபலங்களும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களை இயக்கிய இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க நினைத்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது அந்த வரிசையில் தன்னையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார் ராஜமௌலி.

ss rajamouli
பொன்னியின் செல்வன் : பிரமாண்ட படைப்பின் முதல் பாடல் வெளியானது

சமீபத்தில் தனுஷின் கிரே மேன் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ராஜமௌலி, "பொன்னியின் செல்வன் கதையை ஓடிடிக்கு எடுக்க வேண்டுமென்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். ஏனெனில் இது இரண்டரை மணி நேரத்தில் சொல்லல் கூடிய கதை அல்ல, 8 முதல் 15 மணிநேரம் வெப்சீரிஸாக சொல்லப்பட வேண்டிய கதையாக இருக்கலாம். அதர்கு ஓடிடி தான் சரி" எனப் பேசியிருந்தார்.

அவரது இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது

ss rajamouli
Ponniyin Selvan : "மணிரத்னம் தான் இந்த திரைப்படத்தை எடுப்பார்" - அன்றே கணித்த சுஜாதா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com