Kashmir Files சர்ச்சை: "ஒரு மருத்துவராக அனைத்து உயிரும் சமம் என நம்புகிறேன்"- சாய் பல்லவி

"பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனது அடையாளத்தைக் குறித்து அஞ்சாமல் வாழும் ஒரு நாள் வரும் என நான் நம்புகிறேன்." என்றவர், பள்ளி காலத்தில் அனைத்து இந்தியர்களும் என் சகோதர சகோதரிகள் என்று உறுதிமொழிக் கூறியதை நினைவுகூர்ந்தார்.
sai pallavi
sai pallaviTwitter
Published on

சாய் பல்லவி சில நாட்களுக்கு முன்பு அளித்த நேர்கணல் ஒன்றில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து பேசியிருந்தார். அப்போது அவர் காஷ்மீரி பண்டிதர்களை பசு மாட்டுக்காக வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட நபருடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையானது.

இந்த சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சாய் பல்லவி. அந்த வீடியோவுக்கு "இது என்னுடைய விளக்கம். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், அன்பும், அமைதியும் கிடைக்க விரும்புகிறேன்" எனத் தலைப்பிட்டிருந்தார்.

"நான் ஒரு விஷயத்தை விளக்குவதற்காக உங்களுடன் உரையாடுவது இதுவே முதன்முறை. என்னுடைய வார்த்தைகளை தெளிவுபடுத்தப் போகிறேன்.

சமீபத்திய நேர்கணலில் நான் இடதுசாரி ஆதரவாளரா? வலதுசாரி ஆதரவாளரா? எனக் கேட்கப்பட்டது. அப்போது நான் மிகத் தெளிவாகக் கூறினேன் "நான் ஒரு நடுநிலையாளர்" என்று.

நமது நம்பிக்கைகளை அடையாளப்படுத்துவதற்கு முன் நாம் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் எனவும் கூறினேன். தாழ்த்தப்பட்ட மக்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்." என அந்த வீடியோவில் பேசத் தொடங்கினார் சாய் பல்லவி.

sai pallavi
sai pallaviinstagram

"கஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்த பிறகு படத்தின் இயக்குநருடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு அவரிடம் நான் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் அம்மக்களின் அவலநிலையைப் பார்த்து டிஸ்ட்ரப் ஆனதாக கூறினேன்." எனப் பேசிய சாய் பல்லவி தொடர்ந்து அவரது கருத்துக்களைக் கூறினார்.

sai pallavi
'777 சார்லி' படம் பார்த்து கண்கலங்கிய முதல்வர்- தெரு நாய்களுக்கான புதிய திட்டம் அறிவிப்பு

வன்முறை எந்த மதத்தின் வடிவமாக இருந்தாலும் அது பாவம் என கருதுவதாக சாய்பல்லவி கூறினார். அத்துடன் நேர்காணலுக்குப் பிறகு அவர் சந்தித்த விஷயங்களைக் குறித்துப் பேசத் தொடங்கினார் சாய் பல்லவி.

"இணையத்தில் பலர் சமுதாய வன்முறை சம்பவத்தை நியாயப்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. யாருக்கும் யார் உயிரையும் எடுத்துக்கொள்ள உரிமை இல்லை. ஒரு மருத்துவதுறையில் இருப்பவராக நான் அனைத்து உயிர்களும் சமம் என நம்புகிறேன். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனது அடையாளத்தைக் குறித்து அஞ்சாமல் வாழும் ஒரு நாள் வரும் என நான் நம்புகிறேன்." என்றவர், பள்ளி காலத்தில் அனைத்து இந்தியர்களும் என் சகோதர சகோதரிகள் என்று உறுதிமொழிக் கூறியதை நினைவுகூர்ந்தார்.

"எனவே நான் எப்போதும் நடுநிலையுடன் பேசுகிறேன். ஆனால் சில முக்கிய சேனல்கள் அதனை முற்றிலும் வேறு விதமாக கொண்டுசென்றன. எனது நேர்காணல்களில் இருந்து சில பகுதிகளை வெட்டி அதனை முழுவதுமாக காட்டாமல் நான் பேசிய விஷயத்தில் இருந்த கண்ணியத்தை மறைத்து வெளியிட்டனர்." என கூறினார்.

sai pallavi
பாகிஸ்தான் உணவக விளம்பரத்தில் ஆலியா பட் வீடியோ : என்ன நடந்தது?

"கடந்த 2,3 நாட்களில் என்னுடன் எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி. நான் தனியாக இல்லை என்ற உணர்வை எனக்கு அளித்தது இதயத்துக்கு இதமானதாக இருந்தது" என தனது ஆதரவாளர்கள் நன்றி தெரிவித்திருந்தார் சாய்பல்லவி.

sai pallavi
சாய் பல்லவி : காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும், மத மோதலும் - விவாதத்தை எழுப்பிய கருத்து

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com