சமந்தா முதல் சல்மான் கான் வரை: சில விஷயங்களை ஓபனாக பேசிய நட்சத்திரங்கள்

சமந்தா முதல் சல்மான் கான் வரை, தாங்கள் எந்த மாதிரியான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தெரிவித்திருந்தனர்.
சமந்தா முதல் சல்மான் வரை - பாதிப்புகள் குறித்து மனம் திறந்த நட்சத்திரங்கள்
சமந்தா முதல் சல்மான் வரை - பாதிப்புகள் குறித்து மனம் திறந்த நட்சத்திரங்கள்twitter
Published on

சமூக ஊடகங்களின் வளர்ச்சி, கல்வியின் தாக்கம் போன்ற காரணங்களால், முன்னர் வெளிப்படையாக பேசப்படாத விஷயங்கள் குறித்து மனிதர்கள் மனம் திறந்துவருகின்றனர்.

முக்கியமாக பிரபலங்கள். தங்களது தனிப்பட்ட போராட்டங்கள் குறித்து வெளியில் சொல்வதனால் இமேஜ் பாதிக்கப்படும் என்ற தயக்கமில்லாமல் பலர் மனம் திறந்திருக்கிறார்கள்.

சமந்தா முதல் சல்மான் கான் வரை, தாங்கள் எந்த மாதிரியான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தெரிவித்திருந்தனர்.

சமந்தா ரூத் பிரபு

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடந்த ஆண்டு இவர் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மயோசிடிஸ் எனும் ஒரு ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் சமந்தா.

அந்நோய்க்கான சிகிச்சைகளை அவர் பெற்று வரும் நிலையில், சமீபத்தில் தான் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்தார்

Anushka Shetty
Anushka ShettyTwitter

அனுஷ்கா ஷெட்டி

பாகுபலி, சிங்கம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்தவர் அனுஷ்கா. தமிழ், தெலுங்கு திரையுலகில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அனுஷ்கா அவர் அரிய வகை நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாது அவர் சிரிப்பார் எனவும், தன்னால் சிரிப்பை கட்டுப்படுத்த இயலாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் சமயத்தில் ஷூட்டிங்கை கூட ஒத்திவைக்கும் நிலை வந்திருக்கிறதாம்

மம்தா மோகந்தாஸ்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் மம்தா மோகன்தாஸ். இவர் தடையறத் தாக்க, சிவப்பதிகாரம் போன்ற தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.

மம்தா தனக்கு விட்டிலிகோ என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு முன்னர் Hodgkin's Lymphoma எனப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது

சல்மான் கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் அவரது நோய் குறித்து மனம் திறந்திருந்தார். Trigeminal Neuralgia எனும் நரம்பியல் பிரச்னையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் முகத்தில் அதிகமான வலி ஏற்படும் என்றும் , அந்த சமயத்தில் அவரால் பேசக்கூட முடியாது என்றும் சல்மான் கூறியிருந்தார்.

இந்த நோய்க்கு சிகிச்சைபெற அமெரிக்கா சென்றார் சல்மான் கான். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக தற்கொலைகள் செய்துகொண்டதாகவும் அவர் கூறியிருந்தார்

சமந்தா முதல் சல்மான் வரை - பாதிப்புகள் குறித்து மனம் திறந்த நட்சத்திரங்கள்
சல்மான் கான்: துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு கமிஷனர் ஆபீஸ் சென்ற நடிகர் - ஏன்?

வருண் தவான்

இவர் இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் வெஸ்டிபுலார் ஹைபோஃபன்க்‌ஷன் என்ற பாதிப்பு இவருக்கு இருந்ததாக கூறியிருந்தார்.

இது காதில் ஏற்படும் பாதிப்பு. இதன் தாக்கத்தால், தலைச்சுற்றல் ஏற்பட்டு, ஒருவர் சமநிலையை இழக்கக்கூடும். வருண் அந்த பேட்டியில், தனது இந்த பாதிப்பு குறித்து பேசியிருந்தார்

Deepika Padukone
Deepika PadukoneTwitter

தீபிகா படுக்கோன்

பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா படுக்கோன் ஒரு முறை தான் டிப்ரஷனால் பாதிக்கப்பட்டிருந்தாக தெரிவித்தார். கடந்த 2015ல் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், மனவுளைச்சலால் இவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பல முறை தற்கொலை எண்ணங்கள் தோன்றியதாகவும் அவர் கூறினார்

சமந்தா முதல் சல்மான் வரை - பாதிப்புகள் குறித்து மனம் திறந்த நட்சத்திரங்கள்
தீபிகா படுகோன்: உலகின் மிக அழகான பெண்கள் பட்டியலில் ஒரே இந்தியர் - இவரது இடம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com