பயணங்களின்போது நடிகர் அஜித் குமார் இந்த பாடலை தான் விரும்பிக் கேட்கிறார். நேற்று அவரது மனைவி தன் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் மனம் நெகிழச் செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித் குமார். ஒரு நடிகராக மட்டுமல்லாது ஒரு சக மனிதனாக அவர் சமூகத்தில் பலருக்கு செய்து வரும் உதவிகளால் பலரின் அன்பையும், மரியாதையையும் சம்பாதித்தவர்.
கிட்ட தட்ட மூன்று தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் இருந்துவரும் இவர் இன்று வரை சமூக வலைத்தளங்களில் இல்லை. நடிகையும், அஜித் குமாரின் மனைவியுமான ஷாலினி சமீபத்தில் தான் தனது சமூக வலைத்தள கணக்குகளை தொடங்கினார்.
அதில் தன் கணவர் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்கிறார், அது வைரலும் ஆகிறது.
நேற்று நடிகை அஜித்துடன் காரில் பயணிக்கும் வீடியோ ஒன்றினை பகிர்ந்திருந்தார். அதில் அவர், “பயணங்களில் அஜித் விரும்பிக் கேட்கும் பாடல் இது தான்” என்று தலைப்பிட்டிருந்தார்.
வீடியோவில், உயிரும் நீயே உடலும் நீயே பாடல் ஒலித்துக்கொண்டிருப்பது கேட்கிறது.
இப்பாடல், அஜித் குமார் நடிப்பில் 1994ல் வெளியான ‘பவித்ரா’ திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தில், தாய் தந்தை இல்லாத இளைஞாக அஜித் நடித்திருப்பார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் செவிலியராக இருக்கும் ராதிகா, இவரை தன் மகனாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்குள் இருக்கும் உறவு பற்றிய கதை தான் படம்
கே சுபாஷ் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பின்னணி இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் தாயின் அன்பை போற்றும் இரண்டு பாடல்கள் அமைந்திருக்கும். அதில் ஒன்று தான் இந்த உயிரும் நீயே உடலும் நீயே பாடல். வைரமுத்து இப்பாடலை எழுதியிருக்கிறார்
இந்த வீடியோவை ஷாலினி பகிர, இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust