Spotify, Open AI இணைந்து உருவாக்கியுள்ள AI DJ - புதிய தொழில்நுட்பத்தின் அம்சங்கள் என்ன?

ஏற்கனவே ஸ்பாட்டிஃபை ஆப்-க்கு, நமக்கு எந்த மாதிரி பாடல்கள் கேட்க பிடிக்கும் எனத் தெரியும். இந்த AI DJ நமக்குப் பிடித்த பாடலை மட்டுமில்லாமல், நாமிருக்கும் சூழலையும் தெரிந்து அதற்கு ஏற்றபடி ப்ளே செய்யும்.
Spotify, Open AI இணைந்து உருவாக்கியுள்ள AI DJ - புதிய தொழில்நுட்பத்தின் அம்சங்க்கள் என்ன?
Spotify, Open AI இணைந்து உருவாக்கியுள்ள AI DJ - புதிய தொழில்நுட்பத்தின் அம்சங்க்கள் என்ன?Twitter
Published on

நம்ம எல்லோருக்கும் DJ என்றால் பார்ட்டியில், சில கல்யாண நிகழ்வுகளில் பாட்டு போடுபவர் என்று தெரியும். ஆனால், உங்களுக்கு AI DJ என்றால் என்னவென்று தெரியுமா?

Spotify-ல் artificial intelligence தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி AI DJ-வை அறிமுகப்படுத்தியுள்ளனர். Spotify நிறுவனம் பாட்காஸ்ட் மற்றும் பாடல்களை இலவசமாக வழங்குகிறது. விளம்பரம் இல்லாமல் பாடல்களைக் கேட்க மாதம் அல்லது வருட சாந்த முறையிலும் சேவையை கொடுத்துவருகிறது.

தற்போது அந்த நிறுவனம் புதுமையின் உச்சமாக Open AI நிறுவனத்தின் உதவியோடு AI DJ என்கின்ற புத்தம் புது அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து புதன்கிழமை தங்களது Blog பதிவில் தெரிவித்திருந்தது ஸ்பாடிஃபை நிறுவனம்.

Generative AI என்ற தொழில்நுட்பத்தை Open AI செயல்படுத்தி வருகிறது. இதுதான் ChatGPT செயல்பட உதவுகிறது.

2022-ம் ஆண்டு ஜூன் மாதம், Sonantic AI நிறுவனத்தை Spotify நிறுவனம் வாங்கியது. Sonatic AI என்பது டைனமிக் AI வாய்ஸ் பிளாட்ஃபார்ம் என்பது குறிப்பிடத்தக்கது.

AI DJ என்ன செய்யும் ?

ஸ்பாட்டிஃபை அதன் பயனர்கள் விரும்பும் வகையில் புது புது அம்சங்களை அறிமுகப்படுத்துவருகிறது. அந்த வகையில் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் புது அம்சம் AI DJ.

AI DJ ஒரு DJ போலவே செயல்படும். ஏற்கனவே ஸ்பாட்டிஃபை ஆப்-க்கு, நமக்கு எந்த மாதிரி பாடல்கள் கேட்க பிடிக்கும் எனத் தெரியும். இந்த AI DJ நமக்குப் பிடித்த பாடலை மட்டுமில்லாமல், நாமிருக்கும் சூழலையும் தெரிந்து அதற்கு ஏற்றபடி ப்ளே செய்யும்.

Spotify, Open AI இணைந்து உருவாக்கியுள்ள AI DJ - புதிய தொழில்நுட்பத்தின் அம்சங்க்கள் என்ன?
சோழர்கள் முதல் ஜெயமோகன் வரை : AI இவர்கள் குறித்து என்ன நினைக்கிறது தெரியுமா?

இந்த AI DJ-வை ஸ்டார்ட் செய்த உடனேயே ஓர் குரல் ஒலிக்கும். அது அந்த AI-ன் குரல். அது சில கேள்விகள் கேட்கும். உதாரணத்துக்கு, நமக்கு பிடித்த பாடல், பாடகர், இசையமைப்பாளர் போன்றவற்றை கேட்கும். இது முதல்முறை மட்டும்தான்.

இந்த AI DJ-ன் குரல் யாருடையது என்றால், ஸ்பாட்டிஃபை நிறுவனத்தின் Head of Cultural Partnerships சேவியர் எக்ஸ் ஜெர்னிகன் குரலாகும். இவர் Spotify-ன் ஹோஸ்ட் ஆவார். இவர், மார்னிங் ஷோ' மற்றும் தி கெட்-அப் ஷோ'வை தொகுத்து வழங்கி, அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாகியுள்ளார்.

Spotify, Open AI இணைந்து உருவாக்கியுள்ள AI DJ - புதிய தொழில்நுட்பத்தின் அம்சங்க்கள் என்ன?
Dawn AI: பிரபலங்கள் பகிரும் AI உருவாக்கிய புகைப்படங்கள் - இலவசமாக பெற முடியுமா?

AI DJ பயன்படுத்துவது எப்படி?

.*இந்த AI DJ-வை ஸ்பாட்டிஃபை ஆப்பின் ஹோம் பேஜ்ஜிலுள்ள மியூசிக் ஃபீடில் காணலாம்.

*அந்த DJ கார்டை க்ளிக் செய்ததும் கேள்வி கேட்க தூவங்கும். பின்னர், உங்கள் மூட்டுக்கு ஏற்ப பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும்.

Spotify, Open AI இணைந்து உருவாக்கியுள்ள AI DJ - புதிய தொழில்நுட்பத்தின் அம்சங்க்கள் என்ன?
Chat GPT vs Google Bard: மோதும் AI தொழில்நுட்பம் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

Spotify இந்த அம்சத்தை கொண்டுவந்ததன் காரணம் என்ன?

Spotify-ல் Streaming Intelligence உதவியோடு அதன் பயன்பாட்டாளருக்கு விளம்பரங்களைக் கொடுக்கிறது. அதன் அடிப்படையில் Spotify தனது மென்பொருளை பயன்பாட்டாளர்கள் விரும்பும் வகையில் மாற்றும் நோக்கத்தில்தான் இந்த AI DJ-வை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த AI DJ இப்போது கனடா மாற்று அமெரிக்க ஆகிய நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அங்கும் இந்த AI DJ தற்போது BETA வெர்ஷனில் மட்டுமே இயங்குகிறது.

இந்த AI DJ விரைவில் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

-Prabhu Venkat

Spotify, Open AI இணைந்து உருவாக்கியுள்ள AI DJ - புதிய தொழில்நுட்பத்தின் அம்சங்க்கள் என்ன?
2033ல் AI தொழில்நுட்பம் : ரோபோட்களை வீட்டுவேலைகள் செய்ய வைக்க முடியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com