Thalapathy 68 Update: ”Script எப்பவோ ரெடி!” விஜய் - வெங்கட் பிரபு படத்தில் யார் யார்?

படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டு, படக்குழு குறித்த அப்டேட்டையும் கொடுத்துள்ளனர்.
Thalapathy 68 அப்டேட் : ”Script எப்பவோ ரெடி!” விஜய் - வெங்கட் பிரபு படத்தில் யார் யார்?
Thalapathy 68 அப்டேட் : ”Script எப்பவோ ரெடி!” விஜய் - வெங்கட் பிரபு படத்தில் யார் யார்? ட்விட்டர்
Published on

இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

விஜயதசமியை முன்னிட்டு திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விஜய்யின் 68வது படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. இவர் ஏற்கனவே சென்னை 28, மங்காத்தா, கோவா, மாநாடு போன்ற படங்களை இயக்கியவர். விஜய்யுடன் முதன் முறையாக கைக்கோர்க்கிறார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

புதிய கீதை படத்திலிருந்து 20 ஆண்டுகள் கழித்து, மீண்டும் விஜய் படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார் யுவன்.

இந்த படத்திற்கு தலைப்பை இன்னும் அறிவிக்கவில்லை. விஜயதசமியை முன்னிட்டு பூஜைக்கு படத்தின் ஸ்க்ரிப்ட்டை கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம்.

இதற்கு பதிலளித்திருந்த வெங்கட் பிரபு, “நீங்கள் கதையில் கரெக்‌ஷன் சொல்லமாட்டிர்கள் என்றால் சொல்கிறேன். ஸ்க்ரிப்ட் எப்பவோ ரெடி. ஏற்கனவே 15 நாள் ஷூட்டிங் முடிந்தது” என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், படத்தின் பூஜை குறித்த வீடியோவை வெளியிட்டு, படக்குழு குறித்த அப்டேட்டையும் கொடுத்துள்ளனர்.

Thalapathy 68 அப்டேட் : ”Script எப்பவோ ரெடி!” விஜய் - வெங்கட் பிரபு படத்தில் யார் யார்?
LEO படம் எப்படி இருக்கு? மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

விஜய் - வெங்கட் பிரபு படத்தில் யார் யார்?

  • விஜய்

  • பிரசாந்த்

  • பிரபு தேவா

  • லைலா

  • சினேகா

  • மீனாட்சி சௌத்ரி

  • மோகன்

  • ஜெயராம்

  • அஜ்மல் அமீர்

  • யோகி பாபு

  • விடிவி கணேஷ்

  • பிரேம்ஜி

  • வைபவ்

  • அரவிந்த் ஆகாஷ்

  • அஜய் ராஜ்

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 68 அப்டேட் : ”Script எப்பவோ ரெடி!” விஜய் - வெங்கட் பிரபு படத்தில் யார் யார்?
Thalapathy 68: 20 ஆண்டுகளுக்கு பின் இணையும் யுவன் - விஜய்; வந்தது அடுத்த படத்தின் அப்டேட்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com