விக்ரம் : ரோலக்ஸ் காட்சியில் தீப்பிடித்த திரை; அதிர்ந்த ரசிகர்கள் - வீடியோ வைரல்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான விக்ரம் திரைப்படம் பாண்டிச்சேரியில் திரையிடப் பட்டுக்கொண்டிருக்கும்போது திடீரென திரையின் ஓரத்தில் தீ பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறை வருவதற்கு முன்பாகவே திரை முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது.
சூர்யா
சூர்யாடிவிட்டர்
Published on


லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியானது. வெளியான நான்கு நாட்களில் 175 கோடி வசூல் சாதனை படைத்துள்ள விக்ரம் படத்தைக் காண மக்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நீண்ட காலத்துக்கு பின் ஒரு தமிழ் படத்திற்கு ரிபீட்டட் ஆடியன்ஸ் வருகை அதிகரித்திருக்கிறது.

திரை தீப்பிடிக்கும்
திரை தீப்பிடிக்கும்டிவிட்டர்

படத்தின் வெற்றியை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுக்கு ஒரு லெக்சஸ் கார், உதவி இயக்குநர்களுக்கு டிவிஎஸ் பைக் என அன்பைப் பரிசு மழையாகக் கமல் பொழிந்தார். இந்த செய்தி ஒரு புறம் அனைவரின் கவத்தை ஈர்க்க, இன்னொரு புறம் 'திரை தீப்பிடிக்கும்' சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

புதுச்சேரி காலாபட்டு என்ற இடத்தில் உள்ள ஜெயா தியேட்டரில் நேற்று படம் திரையிடப் பட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு ஓரமாக திடீரென ஸ்க்ரீன் தீபற்றி எரியத் தொடங்கிவிட்டது. சூர்யாவின் காட்சி திரையில் தோன்றும்போது, பிஜிஎம் உடன் சேர்ந்து தீயாக தோன்றியுள்ளார் சூர்யா.

இதனால் அலறியடித்துக்கொண்டு ரசிகர்கள் வெளியேற தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் திரையரங்கை அடையும் முன் ஸ்க்ரீன் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிவிட்டது.

சூர்யா
Vikram Movie Review: விக்ரம் திரைப்பட விமர்சனம்
சூர்யா
விக்ரம் : லோகேஷ்கு லெட்டர், சூர்யாக்கு... - கமல் கொடுத்த ரோலக்ஸ் அப்டேட்

இதனால் சற்று நேரம் திரையரங்கம் பரபரப்புடன் காணப்பட்டது. சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், மின் கசிவு ஏற்பட்டதால் தீ பிடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

சூர்யா
விக்ரம் : லோகேஷ் கனகராஜுக்கு கமல் பரிசளித்த Lexus கார் குறித்த 10 தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com