Thunivu H Vinoth: ”மதம் உண்மையை மறுப்பவரை கொன்றுவிடும்” இயக்குநர் எச் வினோத் பேசியது என்ன?

ஒரு தகவலின் வாயிலாக, அறிவியலின் வாயிலாக நாம் பயணிக்கும் போது மனித இனம் இன்னும் வேகமாக பரிணமிக்கிறது என்று கூறினார் வினோத்.
H Vinoth
H Vinothட்விட்டர்
Published on

மதம் உண்மையை மறுப்பவர்களை கொன்றுவிடுகிறது என்றும், அறிவியல் அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து மனிதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல வழிவகுக்கிறது என்றும் கூறியுள்ளார் இயக்குநர் எச் வினோத்.

சாதி, மதம், கடவுள் மீதான நம்பிக்கை குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு விதமான புரிதலும், பற்றுதலும் இருக்கும். அவை தனி மனித உரிமை.

அதை மற்றவருக்கு நாம் புகட்டவோ, அவர்கள் மீது நாம் திணிக்கவோ முற்படும்போது தான் பிரச்னைகள் உருவாகின்றன.

எச் வினோத்தின் இயக்கத்தில் துணிவு திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் பல நேர்காணல்களில் பேட்டியளித்து வருகிறார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில், மதம் மற்றும் அறிவியல் குறித்த தனது பார்வையை பகிர்ந்திருக்கிறார் எச் வினோத். மதமும் (Religion) அறிவியலும் (Science) ஒரு உண்மையை (Truth) அதன் முரண்பாட்டை எப்படி பார்க்கிறது, அதனை எப்படி ஏற்றுக்கொள்கிறது என, விளக்கியிருந்தார் அவர்.

“மதம் ஒரு உண்மையை சொல்கிறது. அறிவியல் ஒரு உண்மையை சொல்கிறது. மதத்தில் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை தவறு என்று ஒருவர் கூறினால், மதம் அவரை கொன்றுவிடுகிறது, அல்லது அவனை ஊரைவிட்டு வெளியேற்றிவிடுகிறது.

H Vinoth
"'துணிவு' இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை" வைரலாகும் கலைஞர் கருணாநிதியின் 9 வருட பழைய ட்வீட்

ஆனால் அறிவியல் அப்படி செய்யாது. அது ஒரு உண்மையை சொல்லும். அதன் பிறகு வரும் மற்றொரு விஞ்ஞானி அதை தவறு என்று சுட்டிக்காட்டினால், அவனை கொண்டாடும். அங்கிருந்து பரிணமித்து அடுத்தக்கட்டத்திற்கு போகும்” என்றார்.

ஒரு தகவலின் வாயிலாக, அறிவியலின் வாயிலாக நாம் பயணிக்கும் போது மனித இனம் இன்னும் வேகமாக பரிணமிக்கிறது என்று கூறினார் வினோத்.

மேலும், மற்றுமொரு நேர்காணலில் அவர் பேசும்போது தன்னுடைய சிக்கல்களில் இருந்து நான் விடுபட கடவுள் தேவைப்படுகிறார் என்றும், நான் கடவுளை வழிபடுவதனால், மற்றவருக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் பேசியிருந்தார்.

“நான் கடவுளை வைத்து வியாபாரம் பண்ணவோ, அதிகாரத்தை அடையவோ, அல்லது ஒருவரை வெறுக்கவோ பிரிக்கவோ முயற்சிக்கும்போது தான் கடவுள் பிரச்னையாக மாறுகிறார்” என்றார் வினோத். அவர் பேசிய இந்த இரண்டு காணொலிகளும் பெரும் கவனத்தை பெற்றுவருகிறது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி பொங்கலை ஒட்டி வெளியாகிறது.

H Vinoth
Thunivu: "வியாபார போதைக்கு அடிமையாகுங்க" இயக்குநர் எச்.வினோத் இளைஞர்களுக்கு அட்வைஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com