ரஜினி முதல் சிம்பு வரை : டாப் 10 கோலிவுட் நட்சத்திரங்களின் அதிகபட்ச வசூல்கள்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் வசூல் மன்னர்களின் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல். நீங்கள் ரசித்துப்பார்த்த ஹீரோவின் சந்தை மதிப்பு இதுதான்.
படங்கள்
படங்கள்Twitter
Published on

Rajinikanth

ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் எந்திரனின் வெற்றியைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப்படைத்தது.

Kamal Haasan

கமலின் விக்ரம் திரைப்படம் 2022ம் ஆண்டின் மிக அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற அந்தஸ்தைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. வெளியான இரண்டு வாரங்களில் 340 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

Vijay

"எங்க அண்ணனுக்கு நான் தான்டா பண்ணுவேன்"னு இயக்குநர் அட்லி விஜய்யை வைத்து இயக்கிய பிகில் திரைப்படம் தான் தளபதியின் திரை வரலாற்றில் அதிக வசூல் செய்தது. இதன் வசூல் தோராயமாக 300 கோடி.

<div class="paragraphs"><p>valimai</p></div>

valimai

Twitter

Ajith

என்ன தான் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் அஜித்தின் வலிமை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 220 கோடி வசூல் செய்து அவரது படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக இருக்கிறது.

படங்கள்
Kashmir Files சர்ச்சை: "ஒரு மருத்துவராக அனைத்து உயிரும் சமம் என நம்புகிறேன்"- சாய் பல்லவி

Vikram

இயக்குநர் சங்கர் மற்றும் விக்ரம் இணைந்த படங்கள் வசூலை குவிக்க தவறியதில்லை. அந்த வகையில் அவர்களின் ஐ திரைப்படம் 200 கோடி வசூல் செய்து விக்ரமின் பிரம்மாண்ட வசூலாக இடம் பெற்றிருக்கிறது.

Suriya

2022ம் ஆண்டு வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டது. 190 கோடி வசூல் செய்து அவரது பட வரிசையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

Dhanush

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணிக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த கூட்டணியின் வெற்றிப்படமான அசுரன் 110 கோடி வசூல் செய்து தனுஷின் கெரியர் பெஸ்ட்டாக இருக்கிறது.

படங்கள்
Vikram Movie Review: விக்ரம் திரைப்பட விமர்சனம்

Simbu

பல ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவுக்கு ரீ என்டரி கொடுத்த சிம்புவை ஈஸ்வரனும் ஏமாற்றியது. எனினும் சிறந்த கம்பேக்காக வந்தமைந்தது 'மாநாடு' திரைப்படம். 117 கோடி ரூபாய் வசூல் செய்து அவருக்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைத்திருக்கிறது.

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் முதன் முதலாக கல்லூரி மாணவனாக நடித்திருப்பார். 110 கோடி வசூல் செய்து அவரின் அதிகபட்ச வசூலாக இருக்கிறது டான்.

Karthi

2019ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் 110 கோடி வசூல் செய்து கார்த்தியின் அதிகபட்ச வசூலாக உள்ளது.

படங்கள்
LCU : லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்பது என்ன? அங்கு என்னென்ன நடக்கும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com