Ponniyin Selvan : குந்தவைக்கு என்ன பிடிக்கும்? Trisha பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் த்ரிஷா நடித்திருந்தாலும், அவருக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசன் தானாம். ரஜினி கூட நடிக்கும் கனவும் பேட்டை படத்தில் நிறைவேறிவிட்டது.
Trisha Krishnan
Trisha KrishnanTwitter

தமிழ் சினிமாவில் கால்பதித்து 20 ஆண்டுகள் கடந்து எவர் க்ரீன் குயினாக இருக்கும் த்ரிஷா குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்களை இங்கே தெரிந்துக்கொள்ளுவோம்.

1999 ஆம் ஆண்டு 'மிஸ் சென்னை' பட்டம் வென்ற த்ரிஷா தற்போதும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையக வலம் வருகிறார்.

அதே வருடத்தில் அதாவது, 1999ல் வெளியான ' ஜோடி' படத்தில் கதாநாயகி சிம்ரனுக்கு தோழியாக நடித்திருப்பார்.

Trisha Krishnan
Trisha KrishnanTwitter

அந்த படத்தின் சில காட்சிகளில் அவர் வந்து போனாலும் ரசிகர்களை கவர்ந்தார்.

2002-ம் ஆண்டு நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக 'மெளனம் பேசியதே' படத்தில் நடித்த த்ரிஷாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பின்னர் 'சாமி', 'கில்லி', 'ஆறு' என கமர்ஷியல் படங்களில் ஹிட் கொடுத்த த்ரிஷா 'அபியும் நானும்', 'விண்ணைத்தாண்டி வருவாயா', '96' என தமிழ் சினிமாவின் முத்திரை கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

Trisha krishnan
Trisha krishnanTwitter

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் த்ரிஷா.

தமிழ் சினிமாவில் இத்தனை வருடங்கள் கழித்து அவருக்கு இன்றும் மார்க்கெட் குறையவே இல்லை. சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மிகவும் பரவலாக பேசப்படுகிறார்.

தற்போது படத்தின் 2 ஆம் பாகம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயுடன் லியோ படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் த்ரிஷா.

Trisha Krishnan
LEO: "நம்ம மக்களுக்கு படம் பண்ணுவோம்ன்னு விஜய் சொன்னார்" - லலித் குமார் சொன்ன சீக்ரட்!

த்ரிஷா குறித்த சுவாரஸ்யமான விஷயங்கள்

மே 4, 1983 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படித்த அதே பள்ளியில், சென்னை சர்ச் பார்க்கில் உள்ள சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தார்.

எத்திராஜ் கல்லூரியில் 2 ஆண்டுகள் மட்டுமே கல்லூரி படிப்பை படித்தார்.

அவர் ஆரம்பத்தில் ஒரு குற்றவியல் உளவியலாளராக ஆக விரும்பினார்.

Trisha Krishnan
Trisha KrishnanTwitter

மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால், 1999 இல் மிஸ் சென்னை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி மகுடத்தையும் சூடிக் கொண்டார். அவர் மிஸ் இந்தியா 2001 போட்டியின் "பியூட்டிஃபுல் ஸ்மைல்" விருதையும் வென்றார்.

த்ரிஷா ஒரு சைவ பிரியர். அவருக்கு விலங்குகள் மீது பிரியம் அதிகம் குறிப்பாக நாய் மீது அலாதிபிரியம்.

த்ரிஷா PETA இந்தியாவின் தூதராகவும் உள்ளார்.

அம்மா செல்லமாக அழைப்பது த்ரிஷ், நண்பர்கள் அழைப்பது ஹனி, மற்ற கதாநாயர்கள் அழைப்பது ட்ராஷ்.

Trisha Krishnan
Trisha : புதிய டாட்டூ போட்டிருக்கிறாரா த்ரிஷா? வைரலாகும் புகைப்படம் - உண்மை என்ன?

ஷூட்டிங் இல்லாத நேரங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வார், அங்கு சென்று நண்பர்களுடன் பொழுதை கழிப்பார். வெளிநாடுகளுக்கு சென்று டைவிங், பங்கி ஜம்பிங் என விளையாடுவது பிடிக்குமாம் த்ரிஷாவுக்கு.

என்னதான் பல படங்களில் த்ரிஷா நடித்திருந்தாலும், விண்ணை தாண்டி வருவாயா தான் அவரின் ஆல் டைம் ஃவெவரட்டாம்.

விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் த்ரிஷா நடித்திருந்தாலும், அவருக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசன் தானாம். ரஜினி கூட நடிக்கும் கனவும் பேட்டை படத்தில் நிறைவேறிவிட்டது.

பி.எம்.டபிள்யூ 5 சீரிஸ் கார் வைத்திருக்கிறார் த்ரிஷா. காரில் பிடித்த கலர் கருப்பு நிறம். மற்றபடி பிடித்த நிறம் பிங்க் என்று சொல்லப்படுகிறது.

Trisha Krishnan
Ponniyin Selvan : ரஜினி சொன்ன கதை, த்ரிஷா Vibe, Hulk ரஹ்மான் - வைரலாகும் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com