நியூயார்க் ஃபேஷன் ஷோவில் 10 வயது திருநங்கை சிறுமி சாதனை | புகைப்படங்கள்

நோயல்லா திருங்கங்கையாக மாற்றமடைந்து 6 ஆண்டுகள் ஆகிறதாம். இந்த சிறிய வயதில் வடிவமைப்பாளர் மெல் அட்கின்சன் சார்பாக ஃபேஷன் ஷொவில் கலந்துகொள்கிறார்.
நியூயார்க் ஃபேஷன் ஷேவில் 10 வயது திருநங்கை சிறுமி சாதனை
நியூயார்க் ஃபேஷன் ஷேவில் 10 வயது திருநங்கை சிறுமி சாதனைTwitter
Published on

வாரலாற்றிலேயே மிக சிறிய வயதில் திருநங்கையாக ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டவர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆகியிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த 10 வயது சிறுமி நோயல்லா மெக்மேஹர்.

10 வயதிலேயே தனது கனவை நனவாக்கி சாதித்திருக்கிறார் அவர்.

நோயல்லா திருங்கங்கையாக மாற்றமடைந்து 6 ஆண்டுகள் ஆகிறதாம். இந்த சிறிய வயதில் வடிவமைப்பாளர் மெல் அட்கின்சன் சார்பாக, அவர் வடிவமைக்கும் உடைகளை அணிந்து ஃபேஷன் ஷொவில் கலந்துகொள்கிறார்.

மெல் அட்கின்சன் கடந்த 2018ம் ஆண்டு திருநங்கையருக்கான ஆடை வடிவமைப்பைத் தொடங்கினார். அது தற்போது அனைத்து LGBTQ மக்களுக்குமான ஆடைகளைத் தயாரிக்கும் பிராண்டாக வளர்ந்திருக்கிறது.

"நோயல்லா எப்போதும் பயந்ததோ அல்லது பதட்டமடைந்ததோ இல்லை. அவளொரு குட்டி புரொஃபெஷனல்" என்று பெறுமையுடன் கூறுகிறார் அவரது தாய்.

"அவள் கேட் வாக் செய்வதில் மிகவும் உற்சாகமாக இருந்தாள். கேமராக்களையும் மக்களையும் பார்க்க அவளுக்கு பிடித்திருந்தது. கூட்டத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பவும் அவளுக்கு தெரிந்திருக்கிறது." என்றும் கூறினார் நோயல்லாவின் அம்மா.

நோயல்லா இரண்டு வயதாக இருக்கும் போதே தான் ஒரு ஆண் அல்ல அன்று கூறினாராம். ஆனால் அவரது பெற்றோர்கள் உடல் ரீதியில் அவளால் திருநங்கையாக மாற முடியாது என நம்பியிருக்கின்றனர்.

நியூயார்க் ஃபேஷன் ஷேவில் 10 வயது திருநங்கை சிறுமி சாதனை
சர்வதேச அழகி போட்டி - பட்டம் வென்ற பிலிப்பைன்ஸ் திருநங்கைக்கு குவியும் பாராட்டு

மருத்துவர்களிடம் நோயல்லா குறித்து ஆலோசனை கேட்ட பின்னர் 4 வயதில் அவரை சமூக ரீதியில் திருநங்கையாக வளர்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

நோயல்லாவுக்கு பல வயதுகளில் திருநங்கை நண்பர்கள் மற்றும் ஆலோசகர்கள் இருக்கிறார்களாம்.

7 வயதாக இருக்கும் போது சட்டப்படி நோயல்லாவின் பெயரை மாற்றியிருக்கின்றனர். அப்போதே அவர் மாடலிங்கிலும் நுழைந்திருக்கிறார்.

நியூயார்க் ஃபேஷன் ஷேவில் 10 வயது திருநங்கை சிறுமி சாதனை
ஆழ்கடலில் ஆபத்தான பயணம், உலக சாதனை படைத்த 4 பெண்கள் - குவியும் பாராட்டுகள்

சிறந்த மாடலாக இருக்கும் நோயல்லா மேடையில் நடந்து வருவதைப் பார்க்க தனக்கே வியப்பாக இருப்பதாக அவரது தாயார் கூறியிருக்கிறார்.

தன்னை போலவே சிறிய வயதில் இருக்கும் திருநர்களிடம் சென்று அவர்களுக்கு தன்னம்பிக்கையும் தெளிவும் அளிக்க வேண்டும் என்பது நோயல்லாவின் ஆசையாம்.

தனது வயதுக்கு அதிகமான தெளிவும் புரிதலும் கொண்டிருக்கும் சூப்பர் கிட் நோயல்லா எதிர்காலத்தில் செய்யவிருக்கும் சாதனைகளுக்கு வாழ்த்துகள்!

நியூயார்க் ஃபேஷன் ஷேவில் 10 வயது திருநங்கை சிறுமி சாதனை
Pride Month : 'LGBTQ' - கட்டுக்கதைகளும் உண்மைகளும்- எளிய விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com