Varisu : தீ தளபதி பாடல் அனிரூத் பாடலின் காப்பியா? - தமனை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ரசிகர்கள் ரகளையாக பாடலை பகிர்ந்து வந்தாலும் இந்த பாடல் பல தரப்புகளிலிருந்து விமர்சனங்களையும் பெற்றுள்ளது. குறிப்பாக இது ’நானும் ரௌடி தான்’ படத்தில் வந்த ’வரவா வரவா’ பாடல் போல இருப்பதாக பலரும் கூறினர்.
Varisu : தீ தளபதி பாடல் அனிரூத் பாடலின் காப்பியா? - தமனை விமசிக்கும் ரசிகர்கள்!
Varisu : தீ தளபதி பாடல் அனிரூத் பாடலின் காப்பியா? - தமனை விமசிக்கும் ரசிகர்கள்!Twitter
Published on

நடிகர் விஜய் நடிப்பில் 2023 பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக தீ தளபதி பாடல் நேற்று மாலை வெளியானது.

சிம்பு குரலில் வெளியாகியிருக்கும் இந்த பாடலின் வீடியோவில் அவரும் தோன்றியிருந்தார். சாண்டி மாஸ்டர் நடனத்தில் தீயாக வந்த இந்த பாடல் நேற்று வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

ரசிகர்கள் ரகளையாக பாடலை பகிர்ந்து வந்தாலும் இந்த பாடல் பல தரப்புகளிலிருந்து விமர்சனங்களையும் பெற்றுள்ளது. குறிப்பாக இது ’நானும் ரௌடி தான்’ படத்தில் வந்த ’வரவா வரவா’ பாடல் போல இருப்பதாக பலரும் கூறினர்.

திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்யும் விஜய்க்கு சமர்ப்பணமாக இந்த பாடல் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்திருந்தது.

|

ஆனால் வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன், இசையமைப்பாளர் அனிருதின் பாடலை காப்பி அடித்ததாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

அது மட்டுமின்றி இந்த பாடலில் நான் ஈ படத்தில் இடம் பெற்ற ஈடா ஈடா பாடலின் தன்மையும் இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Varisu : தீ தளபதி பாடல் அனிரூத் பாடலின் காப்பியா? - தமனை விமசிக்கும் ரசிகர்கள்!
Varisu : வெளியானது ‘தீ தளபதி’ பாடல் - கொண்டாடும் ரசிகர்கள்!

வாரிசு படம் அஜித்தின் துணிவு படத்துக்கு போட்டியாக பொங்கல் அன்று வெளியாகவிருக்கிறது.

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பூ, சம்யுக்தா, ஜெயசுதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Varisu : தீ தளபதி பாடல் அனிரூத் பாடலின் காப்பியா? - தமனை விமசிக்கும் ரசிகர்கள்!
வாரிசு vs துணிவு பொங்கலுக்கு உறுதி: இதுவரை மோதிக்கொண்ட விஜய், அஜித் படங்கள்- வென்றது யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com