Varisu: ”இன்னும் நல்லா வந்திருக்கலாம்” விஜய்யின் உடை குறித்து விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்

விஜய்யின் அலங்காரம் மற்றும் ஆடை குறித்து விமர்சனம் மாதிரியான அட்வைஸ் கொடுத்துள்ளார், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன்.
விஜய்
விஜய் ட்விட்டர்
Published on

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நட்சத்திரங்களின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேச்சு முழுவதுமாக ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து ரசிகர்கள் இணையத்தில் கலந்துரையாடல் நிகழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் அலங்காரம் மற்றும் ஆடை குறித்து விமர்சனம் மாதிரியான அட்வைஸ் கொடுத்துள்ளார், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன்.

அவரது முகநூல் பதிவில் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் தோற்றம் மனதை நெருடியதாக கூறினார்.

"தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது." என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது தான் எளிமை என விஜய் ரசிகர் வாதாடினாலும் எளிமையும் அவைப் பொருத்தமும் வேறு வேறானவை எனவும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு உதாரணமாக நேர்காணலுக்கு செல்லும் போது பொறுப்பாக பார்த்து பார்த்து உடை அணிவதை சுட்டிக்காட்டினார் ஜேம்ஸ்.

"ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது.

தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று." என அவர் எழுதியிருந்தார்.

விஜய்
வாரிசு திரைப்பட பாடல்கள் வெளியீடு : தொகுத்து வழங்கும் ராஜூ ஜெயமோகன் யார்?

மேலும், சினிமாவும், கிரிக்கெட்டும் அதிகப்படியாக இளைஞர்களால் கொண்டாடப்படுவதால் அதில் பங்கேற்பவர்கள் விரும்பாவிடிலும் அவர்களுக்கென சில பொறுப்புகள் உள்ளன என்றும் அவர் கூறியிருந்தார்.

மற்ற திரைத்துறையினர் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுவதில்லை என்று கூறியிருந்த ஜேம்ஸ் வசந்தன்,

“சினிமாகாரர்கள் வசதியானவர்கள் என்பது வெட்ட வெளிச்சம் தானே. உங்களை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் அழகாக வந்தாலும் முதலில் மகிழ்வது உங்கள் ரசிகனாக தான் இருக்கும்” எனவும் அவர் கூறியிருந்தார்.

விஜய்
Varisu: "1990ல எனக்கு போட்டியா ஒருத்தர் இருந்தாரு" வைரலாகும் விஜய்யின் குட்டி ஸ்டோரி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com