வாரிசு திரைப்பட பாடல்கள் வெளியீடு : தொகுத்து வழங்கும் ராஜூ ஜெயமோகன் யார்?

2012 இல் விஜய்யின் நண்பன் படத்தில் ராஜுவும் நடிக்கவிருந்தார். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் படத்தின் வாய்ப்பை இழந்தார்.
ராஜூ ஜெயமோகன்
ராஜூ ஜெயமோகன்Twitter
Published on

விஜய் நடித்துள்ள வாரிசு படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆடியோ வெளியீட்டு சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விழாவினை தொகுத்து வழங்கியுள்ளதாக விஜய் டிவி பிரபலம் ராஜூ ஜெயமோகன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

யார் இந்த ராஜூ ஜெயமோகன்?

திருநேல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜு சென்னையில் வளர்ந்தவர். விசுவல் கம்யூனிகேஷன் டிகிரியை கோவையில் முடித்தார். அவர் தனது நீண்டகால காதலியான தாரிகாவை அக்டோபர் 2020 இல் மணந்தார்.

தொலைக்காட்சியில் தோன்றுவதற்கு முன், அவர் பல மாடலிங் கவர்கள் மற்றும் போட்டோ ஷூட்களை செய்துள்ளார்.

சின்னத்திரை

விஜய் டிவியில் கனா காணும் காலங்களில் நடிகராக அறிமுகமானார் ராஜு. இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்களிலும் பணியாற்றியுள்ளார்.

2012 இல் விஜய்யின் நண்பன் படத்தில் ராஜுவும் நடிக்கவிருந்தார். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் படத்தின் வாய்ப்பை இழந்தார்.

2013 முதல் 2016 வரை, அவர் விஜய் டிவியின் பிரபலமான சரவணன் மீனாட்சி சீசன் 2 இல் சரவணனின் பிஏவாக நடித்தார். ஒரு வருடம் கழித்து நாம் இருவர் நமக்கு இருவர் நாடகத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஜு. நாயகனின் தோழனாக தோன்றி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டார் ராஜூ.

ராஜூ ஜெயமோகன்
டிக்டாக் டு பிக்பாஸ்: மக்கள் மனம் வென்ற இந்த ஜி.பி முத்து யார்?

வெள்ளித்திரை

துணை முதல்வர், மனிதன், நட்புன்னா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ், டான் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

காமெடி கதாபாத்திரத்திலேயே அதுவரை பார்த்த ராஜுவை சிவகார்த்திக்கேயனின் டான் திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய்விட்டனர்.

ராஜூ ஜெயமோகன்
Amala Shaji : பிரியங்கா மோகனை விட அதிக Followers; யார் இந்த 2K கிட்ஸ்லின் Reels க்ரஷ் ?

பிக்பாஸ் டூ ராஜு வூட்ல பார்ட்டி

பிக் பாஸ் சீசன் 5 -ன் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு ராஜுக்கு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் இவருடைய அமைதியும், நகைச்சுவை திறனும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்த காரணத்தால் பிக் பாஸ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராஜூ ஜெயமோகன்.

அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் எங்கு தனது திரைப்பயணத்தை தொடங்கினாரோ அங்கேயே ஒரு புதிய பொலிவுடன் வேறு ஒரு ஷோவில் தோன்றினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜு வூட்ல பார்ட்டி என்னும் நகைச்சுவை ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வந்தார்.

சினிமா பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை கண்டிருந்தாலும் ராஜு ஜெயமோகன் வாரிசு இசைவெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியதன் மூலம் ஒரு தொகுப்பாளராக அடுத்தக்கட்டத்திற்கு சென்றிருக்கிறார் என்றே கூறலாம்.

ராஜூ ஜெயமோகன்
Bigg Boss Janany: ஒரே நாளில் ஆர்மி; த்ரிஷாவுக்கு போட்டியாகும் இந்த ஜனனி யார் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com